நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

துபாய் கோல்டன் விசா; பீதியில் நடிகர் நடிகைகள் 

துபாய்: 

கோல்டன் விசா என்பது துபாயில் வழங்கப்படக்கூடிய 10 ஆண்டு குடியுரிமை. 

தாங்கள் சம்பாதித்த பணத்தை, தங்கள் உறவினர் பணத்தை, பினாமி பணத்தை எந்த ஒரு தடங்கலுமின்றி ஐக்கியஅரபு அமீரகத்தில் வந்து வணிகத்தில் முதலீடு செய்யலாம். 

அதற்காக துபாய் அரசுக்கு 50 ஆயிரம் திர்ஹாம் கட்டினால் போதுமானது.

எவ்வளவு பணம் வேண்டுமானாலும் ஐக்கிய அரபு அமீரகத்தில் வணிக முதலீடு செய்து வரி செலுத்திய உடன் தாங்கள் கொண்டு வந்த கருப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக ஆக்கி லாபத்தை மீண்டும் இந்தியாவிற்குக் கொண்டு வர முடியும் சட்டபூர்வமாக. 

இதுவே கோல்டன் விசா வைத்திருப்போர் செய்யும் முதலீட்டின் பலன்.

சரி எதற்காக தென்னிந்திய நடிகர்களுக்கு கோல்டன் விசா அரசியல்வாதிகளால் துபாய் அரசிடம் பேசி வழங்கப்படுகிறது. 

கோல்டன் விசா வைத்திருப்போர் அமீரகத்தில் உள்ள துபாயில், அபுதாபியில், ஷார்ஜாவில் எங்கு வேண்டுமானாலும் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் அவர்கள் பெயரில் முதலீடு செய்து கொள்ளலாம்.

தென்னிந்திய அரசியல் புள்ளிகள், நடிகர்களைப் பயன்படுத்தி அவர்கள் சட்டவிரோதமாக சம்பாதித்து வைத்துள்ள கருப்புப் பணத்தை துபாயில் முதலீடு செய்து அதில் லாபம் ஈட்டிய மாதிரி வெள்ளைப் பணமாக இந்தியாவுக்கு கொண்டு வருவதற்காகவே தென்னிந்திய நடிகர்கள் பலிகடா ஆக்கப்படுகிறார்கள் என்று கூறப்படுகிறது.

விரைவில் வெளியிடப் போவதாக சொல்லப்படக்கூடிய Tamil Cinema Files ஆவணம் மூலம் எந்தெந்த தென்னிந்திய நடிகர், நடிகையர் எந்த அரசியல்வாதி மூலம் கோல்டன் விசா பெற்று துபாயில் முதலீடு செய்துள்ளார் என்ற விவரங்கள் அடிப்படை ஆதாரங்களுடன் வெளிவர இருக்கின்றன.

இது குறித்து அமலாக்கத்துறையும், மத்திய புலனாய்வுத் துறையும் தகவல்களை சேகரிக்கிறது. (கோல்டன் விசா பெற்றவர்கள் எல்லோரும் தவறு செய்கின்றனர் என்ற அர்த்தம் கொள்ளக்கூடாது.)

இந்த கோல்டன் விசா வாய்ப்பினை பலர் தவறாக பயன்படுத்தியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் தான் மத்திய புலனாய்வு அமைப்புகள் விசாரிக்கின்றன.

இவ்வாறு ஆதாரங்களை சேகரித்து வரும் மத்திய புலனாய்வுத் துறை மற்றும் அமலாக்கத் துறையினர் விரைந்து விசாரித்து வரும் நிலையில் எந்தெந்த தமிழ் நடிகர்கள் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்படப் போகிறார்கள் என்ற பீதி தென்னிந்திய சினிமா உலகில் பல நடிகர்களுக்கு தற்போது எழுந்துள்ளது.

-பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset