நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

மலேசியா, இந்தோனேசியாவில் தயாரிக்கப்படும் 'மீ'-க்களில் புற்றுநோய்க்கு வித்திடும் பொருட்கள்: தைவான் அரசு தடை

தைவான்:

மலேசியா, இந்தோனேசியாவில் தயாரிக்கப்படும் உடனடி 'மீ' க்களில் புற்றுநோய்க்கு வித்திடும் பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தைவான் சந்தைகளில் விற்பனை செய்யப்படும் உடனடி மீகளில் சோதனைகள் நடத்தப்பட்டது.

இதில் சம்பந்தப்பட்ட இரு உடனடி 'மீ' வகைகளில் புற்றுநோய்க்கு வித்திடும் பொருட்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்விரு 'மீ'க்களுக்கு மலேசியா, இந்தோனேசியாவில் தயாரிக்கப்படுகிறது என்று தைவான் சுகாதாரத் துறை கூறியது.

இவ்விரு உடனடி 'மீ'க்களையும் உடனடியாக மீட்டுக் கொள்ளப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த மீ வகைகள் இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதே வேளையில் அவ்விரு உடனடி 'மீ'க்களையும் இறக்குமதி செய்த நிறுவனங்களுக்கு எதிராக அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது என்று அத் துறை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset