நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

தேர்தல் நடைபெறும் கர்நாடகத்தில் ரூ.250 கோடி பறிமுதல்

பெங்களூரு:

சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் கர்நாடக மாநிலத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் இதுவரை அங்கு ரூ.250 கோடி பணம், மது, தங்கம். வெள்ளிப் பொருள்கள் உள் ளிட்டவை பறிமுதல் செய்யப் பட்டுள்ளன.

224 உறுப்பினர்களைக் கொண்ட கர்நாடக சட்டப் பேர வைக்கு அடுத்த மாதம் 10-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.  

மார்ச் 29-ஆம் தேதி தேர்தல் நடத்தை விதிகள் அமலில் வந்தன. உரிய ஆவணங்களின்றி எடுத்து செல்லப் படும் பணம், பொருள்கள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் பறி முதல் செய்கின்றனர்.

இதுவரை ரூ.82 கோடி ரொக் கப் பணம். ரூ.57 கோடி மதிப்பி லான மது பாட்டில்கள், ரூ.78 கோடி மதிப்பிலான தங்கம்,வெள்ளிப் பொருள்கள், ரூ.20 கோடி.மதிப்பிலான இலவச பொருள்கள், ரூ.17 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் உள்ளிட் டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கர்நாடக தலைமை தேர் தல் அதிகாரி அலுவலகம் தெரிவித்தது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset