நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

40% கமிஷன் அரசு 40 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும்: பாஜக மீது ராகுல் விமர்சனம்

பெங்களூரு:

கர்நாடகத்தில் 40 சதவீத கமிஷனை வாங்கும் பாஜக அரசு, வரும் பேரவைத் தேர்தலில் 40 இடங்களை மட்டுமே பெறும் என காங்கிரஸ் முன்னாள் தலை வர் ராகுல் காந்தி கூறினார்.

கர்நாடக மாநிலத்தில் நடைபெறும் அரசு ஒப்பந்தப் பணிகளில், ஒப்பந்தாரர்களிடமிருந்து 40 சதவீதம் கமிஷன் லஞ்சமாக வாங்கப்படுவதாக ஆளும் பாஜக அரசுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை கான்ட்ராக்டர்கள் கூறுகின்றனர்.

மே 10-ஆம் தேதி நடைபெ றும் பேரவைத் தேர்தலை முன்னிட்டு விஜயபுராவில் நடைபெற்ற பேரணியில் ராகுல் பேசியது, இந்தியாவிலேயே ஊழல் மிகுந்ததாக, கர்நாடக பாஜக அரசு. மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 150 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெறும்.40 சதவீத கமிஷன் பாஜக அரசு, 40 இடங்களில் மட்டுமே பெறும்.

முதலில் என்னுடைய மைக் அணைக்கப்பட்டது.பின்னர், என்னுடைய பேச்சுகள் அவை குறிப்பிலிருந்து நீக்கப்பட்டன.

இறுதியில், மக்களவையிலிருந்து நான் நீக்கப்பட்டேன். உண்மையை மக்களவையில் மட்டுமே பேச முடியும் என அவர்கள் (பாஜக) நினைக்கின்றனர். ஆனால், அதை எங்கு வேண்டுமானாலும் பேச முடியும் என்றார் அவர்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset