நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

தில்லியில் மல்யுத்த வீரர்கள் தொடர் போராட்டம்

புது டெல்லி:

பாஜகவைச் சேர்ந்த இந்திய மல்யுத்த சம்மேளன முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷண் சரன் சிங் மீதான பாலியல் புகார் விசாரணை அறிக்கையை வெளியிடக் கோரி மல்யுத்த நட்சத்திர வீரர்கள் பஜ்ரங் புனியா, வினேஷ் போகட் ஆகியோர் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டத்தை தொடங்கினர்.

பிரிஜ் பூஷண் சரண் சிங் எம்.பி.  இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக 12 ஆண்டுக ளாக பதவி வகித்து வந்தார்.

மல்யுத்த வீராங்கனைகளான வினேஷ் போகட், சாக்க்ஷி மாலிக், தார். வீரர் பஜ்ரங் புனியா உள்ளிட் டோர் கடந்த ஜனவரி மாதம் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது பாலியல் தொல்லை புகார்களை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து பிரிஜ் பூஷண் சரண் சிங்கின் பதவி பறிக்கப்பட்டது. இந்நிலையில் வீராங்னைகள் கூறிய பாலியல் தொல்லை புகார் குறித்து விசாரணை செய்ய பிரபல குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோம் தலைமையில் 6 பேர் குழு அமைக்கப்பட்டது.

மேரிகோம் குழு தனது அறிக்கையை ஒன்றிய அரசிடம் தாக் கல் செய்துவிட்டது. ஆனால் இதுவரை அறிக்கை விவரங்கள் பூஷண் சரண் சிங் மீது காவல் நிலையத்தில் செய்த புகாரின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவும், மேரி கோம் குழு அறிக்கையை வெளியிடவும் வலியுறுத்தி வினேஷ் போகட், பஜ்ரங் புனியா சா மாலிக் உள்பட பல்வேறு மல் யுத்த நட்சத்திரங்கள் ஐந்தர் மந்தரில் மீண்டும் போராட்டத்தை தொடங் கினர்.

சிறுமி தொடர்பாக பாலியல் தொல்லை புகாரும் உள்ளதால், போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக் குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் இந்த விவகாரத்தில் இறுதி வரை போராடுவோம் என்று சாக்க்ஷி மாலிக் கூறினார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset