
செய்திகள் தமிழ் தொடர்புகள்
குளிர்சாதனம் இயங்காததால் அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்திய பயணிகள்
சென்னை:
சென்னை சென்ட்ரலில் இருந்து ஹூப்ளி வரை செல்லும் அதிவிரைவு ரயில் நேற்று பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டது.
அந்த ரயிலில் பி-3 பெட்டியில் குளிர்சாதனம் (ஏசி) இயங்கவில்லை.
இதனால், ஆத்திரமடைந்த பயணிகள் அபாய சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினர்.
உடனே , ரயில்வே அதிகாரிகள், ஆர்.பி.எஃப் படையினர் பி-3 பெட்டிக்கு விரைந்து வந்து விசாரித்தனர்.
அப்போது ஏசி இயங்கவில்லை என்றும், இதை சரி செய்ய வேண்டும் என்றும் பயணிகள் வலியுறுத்தினர்.
இதைத் தொடர்ந்து, ரயிலில் பழுதான ஏசி பெட்டியை சரி செய்யும் பணி நடைபெற்றது.
10 நிமிடங்களில் ஏசி பழுது சரி செய்யப்பட்டு, மீண்டும் அந்த ரயில் புறப்பட்டு சென்றது. இந்த ரயில் தாமதமாக புறப்பட்டதால், 4 ரயில்கள் வந்து செல்வதில் தாமதம் ஏற்பட்டது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 18, 2025, 10:54 am
அரபிக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது
May 17, 2025, 2:12 pm
தமிழகத்திலிருந்து 14 விமானங்கள் மூலம் 5,730 பேர் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளவுள்ளன...
May 16, 2025, 1:51 am
ஆளுநர்களுக்கு காலக்கெடு நிர்ணயிப்பதில் உங்களுக்கு என்ன ஆட்சேபனை?: குடியரசுத் தலைவர...
May 16, 2025, 1:39 am
சைபர் க்ரைம் ஹெல்ப்லைனை தொடர்புகொண்டு பானிபூரி, சாக்லேட் கேட்டு அடம்பிடித்த சிறுவன்
May 13, 2025, 4:26 pm
பொள்ளாட்சி பாலியல் வழக்கு: குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும்வரை ஆயுள் தண்டனை
May 11, 2025, 10:49 pm
உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடு மலேசியாவில் நடைபெறும்: டத்தோஸ்ரீ முஹம்மத் இக்ப...
May 11, 2025, 10:27 pm
டத்தோஸ்ரீ முஹம்மது இக்பால், டத்தோ வீரா ஷாகுல் தாவூத்திற்கு இலக்கியப் புரவலர் விருத...
May 11, 2025, 8:08 pm
வன்னியர் சங்கத்தின் ஏற்பாட்டில் சித்திரை முழுநிலவு மாநாடு: 12 ஆண்டுகளுக்குப் பிறகு...
May 11, 2025, 5:07 pm
இஸ்லாமியர்களுக்கு எதிரான எல்லா வன்முறைகளும் பயங்கரவாதம் தான்: தொல் திருமாவளவன்
May 11, 2025, 4:12 pm