நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

அனைத்துலகப் பட்டம் பறக்கவிடும் விழாவில் கார் பாய்ந்தது: 11 பேர் காயம்

பாரிஸ்:

ஃபிரான்சில் நடைபெற்ற அனைத்துலகப் பட்டம் பறக்கவிடும் விழாவில் கார் ஒன்று கூட்டத்தினுள் பாய்ந்தது.

நேற்று (22 ஏப்ரல்) நடந்த இந்த விபத்தில் 11 பேர் காயமுற்றனர். அதில் 4 பெண்களின் உடல்நலம் ஆபத்தான நிலையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

விழாவில் கலந்துகொள்ள ஒவ்வோர் ஆண்டும் நூற்றுக்கணக்கானோர் இங்கு திரள்வார்கள்.

உடற்குறையுள்ள 76 வயது கார் ஓட்டுநர் காரை நிறுத்துவதற்கும் வேகப்படுத்துவதற்குமான கட்டுப்பாட்டுக் கருவி எது என்று தெரியாமல் குழம்பியதால் விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

விபத்தில் ஓட்டுநருக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டன.

அவர் தற்செயலாகக் காயத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டை எதிர்நோக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டது.

- ஃபிதா
ஆதாரம் : AFP

தொடர்புடைய செய்திகள்

+ - reset