நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்தியாவிற்கு வருகை

வாஷிங்டன்:

செப்டம்பர் மாதம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்தியாவிற்கு வருகை தர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2023ஆம் ஆண்டு ஜி-20 மாநாட்டை இந்தியா தலைமையேற்று நடத்துகிறது. இதனை முன்னிட்டு ஜி-20 நாடுகளின் பிரிதிநிதிகள் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளனர். 

இந்நிலையில் வரும் செப்டம்பர் மாதம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்தியாவிற்கு வருகை தர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அமெரிக்க அரசின் மத்திய மற்றும் தெற்காசிய நாடுகளுக்கான செயலாளர் டொனால்ட் லூ செய்தியாளர்களிடம் கூறியதாவது,

நிச்சயமாக 2023 ஒரு முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டாக இருக்கும். இந்தியா ஜி-20 மாநாட்டை நடத்துகிறது.

அமெரிக்கா ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு' மாநாட்டை நடத்துகிறது. அதே போல் ஜி-7 மாநாட்டை ஜப்பான் நடத்துகிறது. 

இது நம் அனைவருக்கும் நமது நாடுகளை நெருக்கமாகக் கொண்டு வருவதற்கான வாய்ப்புகளை வழங்குகிறது.

செப்டம்பர் மாதம் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்வதை அதிபர் ஜோ பைடன் ஆவலுடன் எதிர்பார்க்கிறார் என்றார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset