நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

கத்தாரில் ஈகைப் பெருநாளுக்கு 11 நாட்கள் தொடர் விடுமுறை

தோஹா:

ஈகைப் பெருநாளுக்கு அனைத்து வளைகுடா நாடுகளும் விடுமுறை நாட்களை அறிவித்துள்ளன. அதன் வரிசையில் தற்போது கத்தார் அரசும் மக்களுக்கு விடுமுறை நாட்களை அறிவித்துள்ளது.

அதன்படி, கத்தார் நாட்டு பொதுமக்களுக்கு இந்த ஆண்டு ஈத் அல் பித்ர் பண்டிகையை முன்னிட்டு 11 நாட்கள் நீண்ட தொடர் விடுமுறையை அனுபவிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், இந்த விடுமுறையானது அரசு நிறுவனங்களுக்கும் பொது நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Public holidays in Qatar in 2023 and 2024 | Expatica

கத்தார் அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஈகைப் பெருநாள் விடுமுறை ஏப்ரல் 19, புதன்கிழமை அன்று தொடங்கி ஏப்ரல் 27, வியாழக்கிழமை வரை 9 நாட்கள் தொடரும் என கூறப்பட்டுள்ளது. 

ஏப்ரல் 28, வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 29, சனிக்கிழமை கத்தாரில் வார விடுமுறை நாட்கள் என்பதால் இதனுடன் சேர்த்து மொத்தம் 11 நாட்கள் தொடர் விடுமுறையை கத்தாரில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் அனுபவிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

- ஃபிதா 
ஆதாரம்:  Khaleej Times 

தொடர்புடைய செய்திகள்

+ - reset