நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

10,000 தொழிலாளர்களின் பணி அனுமதிகள் ரத்து: குவைத் உள்துறை அமைச்சகம் முடிவு

குவைத்:

குவைத்தின் மனிதவளத்திற்கான பொது ஆணையம் (Public Authority for Manpower – PAM) பதிவுசெய்யப்பட்ட மற்றும் செல்லுபடியாகாத 10,000 க்கும் மேற்பட்ட பணி அனுமதிகளை ரத்து செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இது குறித்து வெளியான தகவல்களின் படி, உள்துறை அமைச்சருடன் பணி அனுமதிகளின் செல்லுபடியை சரிபார்த்த பிறகு, ரத்து செய்வதற்கான சட்ட நடைமுறைகளை ஆணையம் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், ஈத் அல்-ஃபித்ர் விடுமுறையைத் தொடர்ந்து பணி அனுமதியை ரத்து செய்யும் நடவடிக்கை தொடங்கும் என்று கூறப்படுகிறது. 

பணி அனுமதி நடைமுறைகளுக்கான பிரிவு 35 இன்படி, ஆணையம் இந்த நடவடிக்கையை மேற்கொள்கிறது என கூறப்பட்டுள்ளது.

அதாவது ஒரு தொழிலாளி குவைத்தை விட்டு வெளிநாட்டில் இருக்கும் போது பணி அனுமதி காலாவதியாகிவிட்டாலோ அல்லது ஏதேனும் காரணத்திற்காக அவர்கள் நாடு கடத்தப்பட்டாலோ அனுமதி ரத்து செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், பிற காரணங்களுக்காக பணி அனுமதிகளை ரத்து செய்வது குறித்து அடுத்த மாதம் முதல் ஆணையம் ஆய்வு செய்யும் என்று கூறப்படுகிறது. ஆவணங்களை வழங்குவதில் தோல்வி மற்றும் அங்கீகாரம் பெறாத கல்விச் சான்றிதழ்கள் உள்ளிட்ட காரணங்கள் இதில் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேசமயம், இந்த அனுமதிகளை ரத்து செய்வதற்கான முடிவுகள் பொறியாளர்கள் சங்கம் மற்றும் குவைத் கணக்காளர்கள் சங்கம் போன்ற அங்கீகாரம் பெற்ற தொழில்முறை சங்கங்களிலிருந்து பெறப்பட்ட சோதனைகளின் முடிவுகளின்படி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

- ஃபிதா 
ஆதாரம்: Kuwait Times

தொடர்புடைய செய்திகள்

+ - reset