நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

அங்கீகரிக்கப்படாத உணவகங்களில் உணவுப் பொருட்களை வாங்க வேண்டாம்: அமீரக உணவு பாதுகாப்பு ஆணையம் உத்தரவு

அபுதாபி:

அபுதாபியில் அங்கீகரிக்கப்படாத உணவகங்கள் மற்றும் கடைகளில் இருந்து உணவுப் பொருட்களை வாங்க வேண்டாம் என பொது மக்களை அபுதாபி விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்பு ஆணையம் (Adafsa) அறிவுறுத்தியுள்ளது. 

ஈத் அல் பித்ர் பண்டிகையை முன்னிட்டு அபுதாபி, அல் அய்ன், அல் தஃப்ராவின் பல்வேறு பகுதிகளில் உள்ள உணவகங்கள் மற்றும் பேக்கரிகளில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்கள் பாதுகாப்பானவை என்பதை உறுதிப் படுத்த தொழிற்சாலைகள் மற்றும் பிரபலமான சமையலறைகளில் ஆணையம் ஆய்வு மேற்கொண்டுள்ளது.

பெரும்பாலும் ஈத் போன்ற பண்டிகைக் காலங்களில் பேக்கரிகள் மற்றும் உணவகங்கள் அதிகளவிலான வாடிக்கையாளர்களைக் கையாளும். எனவே, உணவு சுகாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்புத் தரங்களுடன் நிறுவனங்கள் செயல்படுவதைக் கண்காணிக்க அதிக கள ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று ஆணையம் தெரிவித்துள்ளது.

- ஃபிதா 
ஆதாரம்: Khaleej Times 

தொடர்புடைய செய்திகள்

+ - reset