நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ராகுல் காந்தியின் தண்டனைக்கு தடைவிதிக்க சூரத் நீதிமன்றம் மறுப்பு

சூரத்: 

குற்ற அவதூறு வழக்கில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனைக்கு தடை விதிக்க சூரத் மாவட்ட அமர்வு நீதிமன்றம் மறுத்துவிட்டது. ராகுல் காந்தியின் மேல் முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது மோடி சமூகத்தை அவதூறாக பேசியதாக ராகுல் காந்தி மீது குஜராத் எம்.எல்.ஏ பூர்னேஷ் மோடி குற்ற அவதூறு வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கில் அவருக்கு சூரத் பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.

இதையடுத்து அவர் மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.

அவதூறு வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து  ராகுல் காந்தி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

தனக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரியும், குற்றவாளி என்று அறிவித்த கீழ் நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கக் கோரியும் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கின் தீர்ப்பை சூரத் நீதிமன்றம் கூடுதல் நீதிபதி முகாராவ் வியாழக்கிழமை அறிவித்தார். அப்போது ராகுல் காந்தியின் தண்டனையை ரத்து செய்ய முடியாது என்று அவர் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset