நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

கார்த்தி சிதம்பரத்தின் ரூ.11 கோடி சொத்துகள் முடக்கம்

புது டெல்லி:

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் காங்கிரஸ்எம்பி, கார்த்தி சிதம்பரத்தின் ரூ. 11.04 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியது.

முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ஐஎன்எக்ஸ் மீடியா வெளிநாடுகளில் இருந்து ரூ.305 கோடி பெற கைமாறாக கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனத்தில் முதலீடு செய்தததாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.

இதில் சட்டவிரோதபணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து பல ஆண்டுகளாக விசாரணை நடத்தி வருகின்றன.

இந்நிலையில், கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் முதல்கட்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில் அவருக்கு  சொந் தமான ரூ. 11.04 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.

முடக்கப்பட்டுள்ள அவருடைய 4 சொத்துகளில், கர்நாடக  மாநிலம் கூர்க் மாவட்டத்தில் அமைந்துள்ள அசையா சொத்துகளும் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் ஜாமீன் பெற்று வெளியே வந்தனர்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset