நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் சிந்தனைகள்

By
|
பகிர்

ஒருபோதும் நிராசை அடையவே கூடாது: அபுல் கலாம் ஆஜாத் | வெள்ளிச் சிந்தனை

நிராசை எல்லை கடந்து உச்சக்கட்டத்தை அடைந்து விடுகின்ற போது, நம்பிக்கைக்கான எந்தவொரு வழிவகையும் ஆதாரமும் திரும்பும் திசையெங்கும் எஞ்சியிராத போது, திடீரென்று வானவெளியில் மிகப்பெரும் புரட்சி வெடிக்கின்றது.

இடியின் கர்ஜனையும் மின்னலின் ஒளியும் நம்பிக்கையாய் மலர்ந்து உலகமெங்கும் பரவிவிடுகின்றன...

முழுக்க முழுக்க இதயத்துக்கு ஆறுதல் அளிக்கின்ற நம்பிக்கைக்குப் பெயர்தான் இஸ்லாம்.

அது ஒரு மனிதரின் கையைப் பற்றிக்கொள்கின்ற போது அவருக்கு அது கொடுக்கின்ற முதல் வெகுமதியே நம்பிக்கைதான்....

இஸ்லாமிய மரபில் நம்பிக்கையின் பெயர்தான் ஈமான். நிராசையோ குஃப்ர் - இறைமறுப்பு ஆகும்.

இந்த உலகத்தில் நிராசையடைவதற்காக முஸ்லிம்கள் படைக்கப்படவில்லை.

அவர்கள் நம்பிக்கைக்காக மட்டுமே உரியவர்கள்.

எந்த நாளை அவர்கள் தமக்குரியதல்ல என நினைக்கின்றார்களோ அந்த நாளில் அவர்கள் முஸ்லிம்களாய் இருப்பதில்லை. 

இறைவன் விரக்தி கொள்கின்றவர்களைக் குறித்து, ‘அவர்கள் நிராசை அடைந்துவிட்டார்களேயானால் அவர்களுக்கு நான் படைத்த பூமி பொருத்தமான இடம் இல்லை. .... ஃபல்யம்துத் பிஸபபின் இலஸ் ஸமாயி சும்ம லியக்தஅ فَلْيَمْدُدْ بِسَبَبٍ إِلَى السَّمَاءِ ثُمَّ لْيَقْطَعْ ... அவர்கள் ஒரு கயிற்றைக் கழுத்தில் மாட்டிக் கொண்டு தற்கொலை செய்து கொள்ளட்டும்’. ஏனெனில் நிராசையின் அடுத்த இலக்கு தற்கொலைதான். 

மௌலானா அபுல் கலாம் ஆஜாத்

தொடர்புடைய செய்திகள்

+ - reset