செய்திகள் சிந்தனைகள்
20 நாட்கள் கடந்துவிட்டோம்; எப்போதுதான் நன்மையை சம்பாதிக்கப் போகின்றீர்கள்?: ரமலான் சிந்தனைகள்
என் இனிய நண்பர்களே!
உங்களுடைய ரமலானின் 20 நாட்கள் முடிந்துவிட்டன. மூன்று வாரங்கள் பஞ்சாய் பறந்துவிட்டன.
உங்களின் மன இச்சையை நசுக்கி, உங்களின் மனத்தை உங்களுக்குக் கட்டுப்பட்டு நடக்கக்கூடியதாய் ஆக்குவதில் உங்களுக்கு வெற்றி கிடைத்துவிட்டதா?
இந்த நாள்களில் நீங்கள் கேட்டறிந்த நல்ல நல்ல செய்திகளின்படி அறிவுரைகளின்படி உங்களின் வாழ்க்கையை, உங்களின் இயல்பை, உங்களின் நடத்தையை உங்களின் அன்றாட அலுவலை, நடப்பை மாற்றி அமைத்துக் கொண்டீர்களா?
வாழ்வு எனும் தேர்வில் வெற்றி பெற வேண்டும், மிக மிக உயர்ந்த படித்தரங்களை வென்றடைய வேண்டும், இறைநெருக்கத்தைப் பெற வேண்டும் என்கிற பேரார்வமும் பெருவிழைவும் உங்களுக்குள் தோன்றியதா?
இந்த நாள்களில் நல்லறங்களில் ஈடுபட்டவர்களுக்கு ஒரு வார்த்தை. உங்களின் இந்த நடத்தையை தொடருங்கள்.
இந்த நாள்களிலும் தீயச் செயல்களில் திளைத்தவர்களுக்கு ஓர் எச்சரிக்கை. உங்களை நீங்களே அதட்டி, கண்டித்து, நொந்து, திருந்திவிடுங்கள்.
இந்த அருள்வளம் நிறைந்த மாதத்திலும் இழப்பைத்தான் சம்பாதிப்பீர்கள் எனில் எப்போதுதான் இலாபத்தை ஈட்டப் போகின்றீர்கள்?
இந்த புனிதமான மாதத்திலும் இழப்புகளை முற்றாக ஒதுக்கித் தள்ளி இலாபங்களின் பக்கம் கச்சையைக் கட்டிக் கொண்டு முன்னேற முற்படவில்லையெனில் எப்போதுதான் அதன் பக்கம் திரும்பப் போகின்றீர்கள்?
- இமாம் இப்னு அல் ஜுஸி (ரஹ்)
தொடர்புடைய செய்திகள்
November 15, 2024, 7:44 am
வேஷம் என்பது... - வெள்ளிச் சிந்தனை
November 8, 2024, 7:21 am
உலகம் சோதனைக் களம்: இங்கு கூலியை எதிர்பார்க்கக் கூடாது - வெள்ளிச் சிந்தனை
November 1, 2024, 9:31 am
நல்லவற்றையே பேசுங்கள் - வெள்ளிச் சிந்தனை
October 25, 2024, 1:14 am
சகோதர தாத்பர்யம் எப்படி இருக்க வேண்டும்? - வெள்ளிச் சிந்தனை
October 18, 2024, 8:09 am
அன்பு மகனே...! - வெள்ளிச் சிந்தனை
October 11, 2024, 8:35 am
நாம் நாமாக இருப்போம் - வெள்ளிச் சிந்தனை
September 20, 2024, 9:33 am
எதை விடுவது? - வெள்ளிச் சிந்தனை
September 16, 2024, 8:45 am
நபி பிறந்தார்..எங்கள் நபி பிறந்தார்..! - மீலாது சிறப்புக் கட்டுரை
September 13, 2024, 8:11 am
ஆணுக்கும் கற்புண்டு - வெள்ளிச் சிந்தனை
September 11, 2024, 7:57 am