நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ராமநவமி கொண்டாட்ட வன்முறையில் அமித் ஷா இரட்டை வேடம்: திரிணமூல் காங்கிரஸ்

கொல்கத்தா:

இந்தியாவின் பல்வேறு இடங்களில் ராம நவமி கொண்டாட்டங்களின்போது ஏற்பட்ட வன்முறை சம்பவங்களைக் கையாள்வதில், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரட்டை வேடம் போடுவதாக திரிணமூல் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

இந்தியா முழுவதும் கடந்த வாரம் ராம நவமி பண்டிகை கொண்டாடப்பட்டபோது பல்வேறு பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன.

இதில் மேற்கு வங்க மாநிலம் ஹெளராவில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக மாநில அரசிடம் ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிக்கை கேட்டுள்ளது.

இதுகுறித்து திரிணமூல் காங்கிரஸ் கட்சி, பாஜக அல்லாத எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களான மேற்கு வங்கம், பிகாரில் ராம நவமி வன்முறை குறித்து துடிதுடித்து அமித் ஷா நடவடிக்கை மேற்கொண்டார்.

ஆனால், பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளும் கர்நாடகம், உத்தர பிரதேசம், குஜராத் மற்றும் மகாராஷ்டிரத்தில் ராம நவமி கொண்டாட்டங்களின்போது ஏற்பட்ட வன்முறை தொடர்பாக அவர் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

இந்த விவகாரத்தில் அவர் இரட்டை வேடத்தை காண்பிக்கிறது என்று விமர்சிக்கப்பட்டுள்ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset