செய்திகள் சிந்தனைகள்
படித்துப் பார், உன்னுடைய புத்தகத்தை..! - வெள்ளிச் சிந்தனை
இப்போது தான் தொடங்கியது போல் இருக்கிறது...
ஆனால், அதற்குள் பதினாறு நாட்கள் உருண்டோடி விட்டன.
வாழ்க்கை இப்படி தான் வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு நாளும் பொழுது புலரும்போதெல்லாம் வாழ்க்கை எனும் புத்தகத்தின் தாள் ஒன்று புரட்டப்பட்டு விடுகின்றது.
புரட்டப்பட்டு விடுகின்ற தாள்களின் எண்ணிக்கை நாள்தோறும் கூடிக்கொண்டே போகின்றது.
புத்தகத்தில் புரட்டப்படாமல் எஞ்சியிருக்கின்ற தாள்களின் எண்ணிக்கையோ நாள்தோறும் குறைந்து கொண்டே போகின்றது.
இறுதியில் ஒரு நாள் பொழுது புலரும்போது நாம் நம்முடைய வாழ்க்கையின் கடைசி தாளைப் புரட்டிக் கொண்டிருப்போம்.
அந்த நாளில் இந்த புத்தகம் மூடப்பட்டு விடும். நம்மால் எழுதப்பட்ட இந்தப் புத்தகத்தின் முகப்பில் நம்முடைய பெயர் எழுதப்பட்டு பாதுகாக்கப்பட்டு விடும்.
நம்மால் எழுதப்படுகின்ற இந்தப் புத்தகம் தயாராகிக்கொண்டிருக்கின்றது என்கிற உணர்வு கூட நமக்கு இருப்பதில்லை.
இந்தப் புத்தகத்தை எழுதுவதில் வேறு எவருமே நமக்குத் துணையாக இருக்க மாட்டார்கள்.
முழுக்க முழுக்க நாம் மட்டுமே தன்னந்தனியாக எழுதிய புத்தகம் இது.
நாளை மறுமையில் இந்தப் புத்தகம்தான் நம்முடைய கையில் இருக்கும்.
நம்முடைய அதிபதி நம்மைப் பார்த்துச் சொல்லிக் கொண்டிருப்பான்:
‘படித்துப் பார், உன்னுடைய இந்தப் புத்தகத்தை! இன்று உன்னுடைய வினைப்பட்டியலைப் பரிசீலிக்க நீயே போதுமானவன்!’
(அத்தியாயம் 17 பனூஇஸ்ராயீல் 14)
தொடர்புடைய செய்திகள்
November 15, 2024, 7:44 am
வேஷம் என்பது... - வெள்ளிச் சிந்தனை
November 8, 2024, 7:21 am
உலகம் சோதனைக் களம்: இங்கு கூலியை எதிர்பார்க்கக் கூடாது - வெள்ளிச் சிந்தனை
November 1, 2024, 9:31 am
நல்லவற்றையே பேசுங்கள் - வெள்ளிச் சிந்தனை
October 25, 2024, 1:14 am
சகோதர தாத்பர்யம் எப்படி இருக்க வேண்டும்? - வெள்ளிச் சிந்தனை
October 18, 2024, 8:09 am
அன்பு மகனே...! - வெள்ளிச் சிந்தனை
October 11, 2024, 8:35 am
நாம் நாமாக இருப்போம் - வெள்ளிச் சிந்தனை
September 20, 2024, 9:33 am
எதை விடுவது? - வெள்ளிச் சிந்தனை
September 16, 2024, 8:45 am
நபி பிறந்தார்..எங்கள் நபி பிறந்தார்..! - மீலாது சிறப்புக் கட்டுரை
September 13, 2024, 8:11 am
ஆணுக்கும் கற்புண்டு - வெள்ளிச் சிந்தனை
September 11, 2024, 7:57 am