நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

'ஐயோசாமி நீ எனக்கு வேணாம்' பாடல் உயரிய விருதை பெற்றது 

கொழும்பு: 

'ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்' பாடல் இவ்வாண்டின் சிறந்த பாடலுக்கான உயரிய விருதினை பெற்றுள்ளது.

'ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்' பாடல் இலங்கையில் வெளிவந்த பாடல்களில் இந்த வருடத்தின் சிறந்த பாடலுக்கான மக்கள் விருதினை Peoples Awards நேற்று பெற்றுள்ளது. (SLIM Kantar People's Song of the Year 2023) 

இலங்கை இசை வரலாற்றில் இந்த உயரிய விருதினை தமிழ் பாடல் பெறுவது இதுவே முதல் முறையாகும். 

இந்தப் பாடலின் வரிகளை இயற்றியவர் கவிஞர் பொத்துவில் அஸ்மின் ஆவார்.

இந்த வெற்றியின் வேருக்கு நீர்பாய்ச்சிய உலக மக்கள் அனைவருக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள் என்று அஸ்மின் தெரிவித்துள்ளார்.

May be an image of 1 person, beard, standing and wrist watch

கவிஞர் பொத்துவில் அஸ்மின்

இந்த உயர் விருதினை இசையமைப்பாளர் Sanuka Wickramasinghe அவரது துணைவி Windy Goonatillake ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

18 மில்லியன் பார்வையாளர்களைக் கவர்ந்த இந்த பாடலை பாடியவர் ஒரு சிங்கள பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

- ஃபிதா 

தொடர்புடைய செய்திகள்

+ - reset