
செய்திகள் உலகம்
அமெரிக்காவுக்கு எதிராகப் போர் புரிய வட கொரியா தயார்
பியாங்காங் :
அமெரிக்காவுக்கு எதிராக போர் புரிய எட்டு லட்சம் பேர் ராணுவத்தில் இணைய ஆர்வமாக இருப்பதாக வடகொரிய அரசு அறிவித்துள்ளது. கிழக்காசிய நாடான வட கொரியா தன்னிடம் உள்ள அணு ஆயுதங்களை வைத்து தன் அண்டை நாடுகளான தென் கொரியா மற்றும் ஜப்பானை அச்சுறுத்தி வருகிறது.
இதற்கு முன் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைச் சோதனைகளையும் மேற்கொண்டு வருகிறது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்காவும் தென் கொரியாவும் இணைந்து கொரிய தீபகற்பத்தில் போர் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
வட கொரியாவின் 'ரோடங் சின்முன்' என்ற செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் அமெரிக்காவுக்கு எதிராகப் போரிட எட்டு லட்ச மக்கள் வ்ட கொரிய இராணுவத்தில் இணைய ஆர்வமுடன் இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
இதில் பெரும்பாலானோர் மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமீபத்தில் வட கொரியா 'வாசாங்போ-17' என்ற கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் ஏவுகணை சோதனையை நடத்தியது. இதை அந்நாட்டு அரசு உறுதிப்படுத்தியதுடன் போரைத் துாண்டும் வகையில் ஈடுபடும் அமெரிக்காவுக்கும் தென்கொரியாவுக்கும் எச்சரிக்கை விடுக்கவே இந்த ஏவுகணை பரிசோதனை என்றும் குறிப்பிட்டுள்ளது.
வட கொரிய தலைநகர் பியாங்காங்கின் சுனான் என்ற பகுதியிலிருந்து கிழக்கு கடல்பகுதியில் குறுகிய இலக்கை சென்று தாக்கக்கூடிய ஏவுகணை பரிசோதனையை வட கொரியா நேற்று நடத்தியது. மேலும், வட கொரிய அரசின் இத்தகைய நடவடிக்கைகளை தொடர்ந்து கூர்ந்துகண்காணித்து வருவதாக தென் கொரிய அரசு தெரிவித்துள்ளது.
ஆதாரம்: Reuters
- அஸ்வினி
தொடர்புடைய செய்திகள்
May 9, 2025, 2:00 pm
சிங்கப்பூர் முழுவதும் காவல்துறை அதிரடி சோதனை: 313 பேர் விசாரிக்கப்பட்டனர்
May 9, 2025, 10:00 am
கத்தோலிக்க சமூகத்தினரின் புதிய போப் தேர்ந்தெடுக்கப்பட்டார்
May 8, 2025, 11:09 am
புதிய போப்பிற்கான முதல் வாக்களிப்பில் பெரும்பான்மை எட்டப்படவில்லை
May 8, 2025, 10:28 am
உலகளாவிய வணிகப் பிரிவில் கூகுள் 200 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது
May 7, 2025, 5:33 pm
ஸ்காட்லாந்தில் உலகின் பழமையான கால்பந்து மைதானம் கண்டுபிடிப்பு
May 7, 2025, 3:50 pm
இந்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததுடன் 46 பேர் காயமடைந்தனர்: பாகிஸ்தான் அறிவிப்பு
May 6, 2025, 4:03 pm