
செய்திகள் இந்தியா
கிழக்கு லடாக் பகுதியில் பதற்றம் நீடிக்கிறது
புது டெல்லி:
கிழக்கு லடாக் எல்லையின் பல்வேறு பகுதிகளில் இந்தியாவும், சீனாவும் ராணுவப் படைகளைத் திரும்பப் பெற்றுள்ளபோதிலும், சில இடங்களில் படைகள் குவிக்கப்பட்டுள்ளதால் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருவதாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
தில்லியில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கூறியதாவது:
எல்லை விவகாரம் தொடர்பாக அமைதி நிலைநாட்டப்படும் என்ற புரிந்துணர்வை இந்தியாவும் சீனாவும் 2020ஆம் ஆண்டு வரை கொண்டிருந்தன. எல்லைப் பகுதிகளில் படைகளை அதிக எண்ணிக்கையில் குவிக்கக் கூடாது என இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தங்கள் உள்ளன.
கல்வான் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சீன ராணுவத்தினர் அத்துமீறல் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவும் தனது படைகளை எல்லைகளில் குவித்தது.
இரு நாடுகளின் ராணுவப் படைகளும் வெகு அருகிலேயே நிலைநிறுத்தப்பட்டுள்ளன. எனவே, சூழல் எப்போது வேண்டுமானாலும் தீவிரமாக மாற வாய்ப்புள்ளது. ராணுவக் கண்ணோட்டத்தில் இது அபாயகரமானதும் ஆகும் என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
June 6, 2023, 7:06 pm
நியாயமான பயணக்கட்டணம்: விமான நிறுவனங்களுக்கு இந்திய அரசு அறிவுறுத்தல்
June 6, 2023, 11:29 am
மணிப்பூரில் மீண்டும் வன்முறை 3 பேர் பலி
June 5, 2023, 2:35 am
கங்கை ஆற்றின் மீது கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து விழுந்தது
June 3, 2023, 9:03 am
கோரமண்டல் ரயில் விபத்து | ஒடிசாவில் 3 ரயில்கள் மோதிக் கொண்டன: 207 பேர் உயிரிழப்பு
June 2, 2023, 7:05 pm
மணிப்பூர் கலவர விசாரணை நடத்த நீதிக் குழு
June 2, 2023, 12:02 am
கடவுளுக்கே உபதேசம் கூறுவார் மோடி: ராகுல் விமர்சனம்
June 1, 2023, 11:53 pm
ஞானவாபி மசூதி குழுவின் மனு தள்ளுபடி
June 1, 2023, 4:37 pm
முன்னாள் காதலியைக் கொடூரமாக கொன்ற ஆடவன் போலீசாரால் கைது
June 1, 2023, 1:18 am