நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சட்டமன்றத் தேர்தல்களில் மஇகா போட்டியிடுவது குறித்து  நாளை விவாதிக்கப்படலாம் - டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்

போர்ட்டிக்சன்:

வரும் சட்டமன்ற தேர்தலில் மஇகா போட்டியிடுவது குறித்து நாளை விவாதிக்கப்படலாம் என்று அக்கட்சியின் தேசிய தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் கூறினார்.

கடந்த தேர்தல்களின் போது தேசிய முன்னணி கூட்டணியுடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தி தொகுதிகள் முடிவு செய்யப்படும்.

ஆனால் கடந்த பொதுத் தேர்தலுக்கு பின் தேசிய முன்னணியும் நம்பிக்கை கூட்டணியும் இணைந்து மத்தியில் ஆட்சி அமைத்துள்ளன.

அதேவேளையில் வரும் சட்டமன்றத் தேர்தலில் ஒற்றுமை அரசாங்கத்தில் உள்ள கட்சிகள் இணைந்து போட்டியிடவும் உள்ளன.

இந்த தேர்தலில் மஇகா போட்டியிடுவது குறித்து போர்ட்டிக்சனின் நடைபெற்ற தொகுதி தலைவர்களுடனான சந்திப்பு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

அதேவேளையில் மஇகா மத்திய செயலவை கூட்டங்களிலும் பேசப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஒற்றுமை அரசாங்கத்தின் சந்திப்பு கூட்டம் நாளை இரவு நடைபெற உள்ளது.

ஒற்றுமை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வார்கள்.

இக்கூட்டத்தில் கண்டிப்பாக சட்டமன்றத் தேர்தல் குறித்தும் தொகுதி பங்கீடு குறித்தும் விவாதிக்கப்படும் என நான் நம்புகிறேன்.

அப்படி விவாதிக்கப்படும் பட்சத்தில் மஇகா போட்டியிடுவது, எந்த தொகுதிகளில் போட்டியிடுவது குறித்தும் முடிவு செய்யப்படும் என நான் நம்புகிறேன்.

இந்த கூட்டத்திற்கு பின் மஇகாவின் நிலை முடிவு செய்யப்படும் என டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset