
செய்திகள் உலகம்
அமெரிக்காவின் 30 மாகாணங்களை ஏமாற்றிய நித்தியானந்தா
நியூயார்க்:
பாலியல் மற்றும் மோசடி புகாரில் இந்திய அரசால் தேடப்படும் போலி சாமியார் நித்யானந்தா, அமெரிக்காவில் 30க்கும் மேற்பட்ட மாகாணங்களில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு ஊழலில் ஈடுபட்டுள்ளதாக ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
"யுனைட்டட் ஸ்டேட்ஸ் ஆப் கைலாசா' என்ற தனி நாடை 2019-இல் நித்யானந்தா உருவாக்கினார்.
அண்மையில் ஐ.நா. மனித உரிமை மாநாட்டில் நித்யானந்தாவின் நிர்வாகிகள் பங்கேற்றுப் பேசினர். இது சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து, அவர்கள் பேசிய பேச்சை அவைக்குறிப்பில் இருந்து ஐ.நா. நீக்கியது.
இந்நிலையில், நூவர்க் நகரத்துக்கும் கைலாசாவுக்கும் இடையேயான கலாசார ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள சகோதரி நகர ஒப்பந்தம் கடந்த ஜனவரி 12ஆம் தேதி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேபோல், விர்ஜினியா மாகாணத்தின் ரிச்மண்ட் , ஒஹையோ மாகாணத்தின் டேட்டன் , ஃபுளோரிடா மாகாணத்தின்பியூனாபார்க் உள்பட 30க்கும் மேற்பட்ட மாகாணங்கள் நித்யானந்தாவின் கைலாசா நாட்டுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக ஃபாக்ஸ் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
கைலாசா நாடு தொடர்பான விவரங்களை சரி பார்க்காமல் அமெரிக்க மாகாணங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டதாகவும், மாகாணங்களின் மேயர், நகராட்சி கவுன்சில் உள்பட தன்னாட்சி அரசும் போலி கைலாசா நாட்டிடம் ஏமாந்துள்ளதாகவும் அந்த ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சி குற்றம்சாட்டியுள்ளது.
இத்தனை நடந்தும் இந்தியாவால் நித்தியானந்தாவை கைது செய்ய முடியவில்லை.
நன்றி: Fox News
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
March 22, 2023, 1:31 pm
யூதக் குடியேற்ற தடை சட்டத்தை ரத்து செய்தது இஸ்ரேல்
March 22, 2023, 1:22 pm
கனடா பள்ளியில் ஆசிரியர்களைக் கத்தியால் குத்திய மாணவன்
March 22, 2023, 10:31 am
ரமலான் நோன்பு நாளை தொடங்குகிறது
March 22, 2023, 9:11 am
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 9 பேர் பலி
March 22, 2023, 12:45 am
சோமாலியாவில் பஞ்சத்தால் 43,000 பேர் பலி: ஐ.நா அறிவிப்பு
March 21, 2023, 9:51 pm
அமெரிக்காவில் இந்திய தூதரகம் மீது தாக்குதல்: இந்தியா கண்டனம்
March 20, 2023, 7:37 pm
அமெரிக்காவுக்கு எதிராகப் போர் புரிய வட கொரியா தயார்
March 20, 2023, 6:58 pm
தாய்லாந்து நாடாளுமன்றம் கலைப்பு
March 20, 2023, 3:47 pm