நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

அதானி விவகாரத்தில் தப்பிக்கவே பாஜக நாடாளுமன்றத்தை முடக்குகிறது: காங்கிரஸ் தலைவர்

புது டெல்லி:

அதானி முறைகேடு விவகாரத்தில் இருந்து தப்புவதற்காக நாடாளுமன்றத்தை பாஜக முடக்கி வருகிறது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டினார்.

அதானி விவகாரத்தில் நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணை வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

லண்டனில் இந்திய ஜனநாயகத்தை அவமதிக்கும் வகையில் பேசிய ராகுல் காந்தி, அதற்காக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கூறி ஆளும் பாஜக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் பிரச்சனை எழுப்பி வருகின்றனர். இதனால், பட்ஜெட் கூட்டத்  4 நாள்களாக முடங்கியுள்ளது.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய கார்கே,
எதிர்க்கட்சியைச் சேர்ந்த நாங்கள் அமைதியாகத்தான் ஊர்வலம் நடத்தினோம். ஆனால், அரசு எங்களை தடுத்து நிறுத்தியது. ஜனநாயகரீதியிலான எங்கள் எதிர்ப்பை அவர்களால் ஏற்க முடியவில்லை.

அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க அரசுக்கு அச்சம் உள்ளது. எனவே, கவனத்தை திசை திருப்ப ராகுலின் பேச்சை பயன்படுத்துகிறது. அதானி விவகாரத்தில் இருந்து தப்ப நாடாளுமன்றத்தையும் பாஜக தொடர்ந்து முடக்கி வருகிறது.

ஆளும் கட்சியினரே நாடாளுமன்றத்தை முடக்கும் அவலம் இங்கு மட்டும்தான் நடைபெறுகிறது. காலையில் அவை தொடங்கியவுடன் "மன்னிப்புக்கேள்' என்று பாஜக எம்.பி.க்கள் கோஷமிடத் தொடங்கிவிடுகிறார்கள்.

ஜனநாயகத்தை எவ்வாறு காற்றில் பறக்கவிடுவது என்பதை அரசே மற்றவர்களுக்கு கற்றுத் தருவதுபோல உள்ளது.

லண்டனில் பேசியதற்காக ராகுல் காந்தி மன்னிப்புக் கேட்கும் கேள்விக்கு இடமில்லை என்றார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset