நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

மேலும் 10 ஆயிரம் ஊழியர்களை நீக்கம் செய்தது மெட்டா

நியூயார்க்:

மேலும் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய மெட்டா முடிவெடுத்துள்ளது.
இதைத் தவிர வேறு வழி இல்லை என்றும்  நிறுவனத்தின் நிதிநிலையை சீர் செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலக அளவில் பல்வேறு நாடுகளில் மெட்ட நிறுவனத்துக்கு அலுவலகங்கள் உள்ளதால் அத்துறை சார்ந்த பணியாளர்கள் இடையே இந்த பணிநீக்க உத்தரவு பெறும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஃபேஸ்புக் கடந்த ஆண்டு நவம்பரில் 11,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவித்தது. இப்போது, மேலும் 10,000 ஊழியர்களை வெளியேற்ற முடிவெடுத்துள்ளது.

சர்வதேச அளவில் ஏற்படும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் நிறுவனத்தின் வளர்ச்சி தொடர்ந்து குறைந்து வருவது போன்ற காரணங்களால் இந்த நடவடிக்கை தவிர்க்க முடியாததாகிவிட்டதாக நிறுவனத்தின் தலைவர் மார்க் ஸுக்கர்பர்க் தெரிவித்துள்ளார்.

ஃபேஸ்புக் நிறுவனம் தொடங்கப்பட்டு 18 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், கடந்த நவம்பரில் மேற்கொள்ளப்பட்ட ஆள்குறைப்பு நடவடிக்கைதான் அதிகபட்ச எண்ணிக்கையாகும்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset