நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

செம்பனைத் தோட்ட ஊழியர்களுக்கு 3 ஆயிரம் ரிங்கிட் சம்பளம்: சைம் டார்பி

கோலாலம்பூர்:

செம்பனை தோட்ட ஊழியர்களுக்கு 3 ஆயிரம் ரிங்கிட் சம்பளம் வழங்கப்படுகிறது என்று சைம் டார்பி நிறுவனம் கூறியுள்ளது.

வரும் 2027ஆம் ஆண்டுக்குள்  தோட்டங்களில் 100 சதவீதம் உள்ளூர் தொழிலாளர்களை வேலைக்கு பணி அமர்த்த வேண்டும் என்பது  சைம் டார்பி நிறுவனத்தின் இலக்காக உள்ளது.

அதன் அடிப்படையில் தற்போது செம்பனை தோட்டத் தொழிலாளர்களுக்கு சைம் டார்பி நிறுவனம் 3 ஆயிரம் வெள்ளியை சம்பளமாக வழங்குகிறது.

இதுவரை 400 பேர் இந்த சம்பளத்தை பெறுகிறார்கள் என்று அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

எப்போதுமே அந்நிய நாட்டு தொழிலாளர்களை நம்பியிருக்க வேண்டாம் என்ற அடிப்படையில் சைம் டார்பி இந்நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

சம்பளத்தை உயர்த்துவதுடன் பணியாளர்களுக்கு பயிற்சி உட்பட பல சலுகைகளையும் சைம் டார்பி நிறுவனம் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset