
செய்திகள் தமிழ் தொடர்புகள்
அதிமுகவில் இணைந்த பாஜக பெண் நிர்வாகிகள்
சென்னை:
பாஜகவில் இருந்த இரண்டு பெண் நிர்வாகிகள், எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இன்று அதிமுகவில் இணைந்தனர்.
பாஜகவின் உள்ளாட்சி மேம்பாட்டுப் பிரிவு மாநிலச் செயலாளர் லதா மற்றும் தாம்பரம் ஒன்றியச் செயலாளர் வைதேகி ஆகிய இருவரும் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அக்கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
பாஜகவினர் தொடர்ந்து அதிமுகவில் இணைந்து வருவதால் பாஜக தலைவர் நேற்று கடுமையாக பேசினார். அதற்கு இன்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.
முன்னதாக பாஜக ஐடி விங் பிரிவு தலைவர் சிடிஆர் நிர்மல் குமார் மற்றும் மாநிலச் செயலாளர் திலீப் கண்ணன் ஆகியோர் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர்.
அதுபோல பாஜகவிலிருந்து 13 நிர்வாகிகள் இன்று அக் கட்சியில் இருந்து விலகியுள்ளதும் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவிற்கும் பாஜகவிற்கும் மோதல் முற்றி வரும் நிலையில் பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலையின் பேச்சிற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை எப்படி தலைவரானார் என்பது குறித்து பேச விரும்பவில்லை. ஆனால், ஜெயலலிதா மாதிரியான தலைவர் என்று சொல்ல அண்ணாமலைக்கு தகுதி இல்லை என்றார் அவர்.
நேற்று எடப்பாடி பழனிசாமி படத்தை பாஜக இளைஞர்கள் கொளுத்தியது குறிப்பிடத்தக்கது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 11, 2025, 5:07 pm
இஸ்லாமியர்களுக்கு எதிரான எல்லா வன்முறைகளும் பயங்கரவாதம் தான்: தொல் திருமாவளவன்
May 11, 2025, 4:12 pm