
செய்திகள் கலைகள்
மலேசியக் கலைஞர்களை ஒன்றிணைக்கும் கெத்து 1.0 மாபெரும் இசை விழா
கோலாலம்பூர்:
மலேசியக் கலைஞர்களை ஒன்றிணைக்கும் நோக்கில் மாபெரும் இசை விழா ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
எம்ஒய்எஸ்எம், யூஅண்ட்ஐ நிறுவனங்களின் ஏற்பாட்டில் கெத்து 1.0 எனும் இந்த இசை விழா நடைபெறவுள்ளது.
இந்த இசை விழா வரும் ஏப்ரல் 15ஆம் தேதி இரவு 7.01 மணிக்கு ஷீப் கோலாலம்பூர் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
மலேசியாவில் தற்போது அதிகமான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
இந்த வரிசையில் மலேசிய கலைஞர்களாலும் தரமான நிகழ்ச்சியை நடத்த முடியும்.
மேலும் அனைத்து கலைஞர்களும் ஒன்றாக இணைந்து மாபெரும் நிகழ்ச்சியை நடத்த முடியும் என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இந்த விழாவில் 30க்கும் மேற்ப்பட்ட மலேசிய கலைஞர்கள் இந்நிகழ்ச்சியில் தங்களின் படைப்புகளை படைக்கவுள்ளனர்.
ரசிகர்களை மகிழ்விக்கும் அனைத்து அங்கங்களும் இந்த விழாவில் உள்ளது.
நிகழ்ச்சி நடைபெறும் அரங்கம் மிகவும் பிரமாண்டமாக நடைபெறும். இதில் 2,500 பேர் அமரலாம்.
இந்நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் தற்போது விற்பனையில் உள்ளது. மிகவும் நியாயமான விலையில் இந்த டிக்கெட்டுகள் விற்கப்படுகிறது.
ஆகவே மலேசிய மக்கள் இவ்விழாவுக்கு முழு ஆதரவு வழங்க வேண்டும் எனறு எம்ஒய்எஸ்எம் நிறுவனத்தின் இயக்குநர் அமிகோஸ் சுகு கூறினார்.
இந்நிகழ்ச்சி குறித்த மேல்விவரங்களுக்கு அமிகோஸ் சுகுவை 012-7100464 தொடர்பு கொள்ளலாம்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 6, 2025, 2:45 pm
கம்பீரக் குரல் ஓய்ந்தது : வானொலி புகழ் வைரக்கண்ணு மறைவு
May 5, 2025, 3:20 pm
பிரபல நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி காலமானார்
May 5, 2025, 10:29 am
வெளிநாட்டில் தயாரிக்கப்படும் படங்களுக்கு 100% வரி: டிரம்ப் அடுத்த அதிரடி
April 28, 2025, 11:05 pm
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் பத்ம பூஷண் விருது பெற்றார் நடிகர் அஜித் குமார்
April 27, 2025, 12:21 pm
‘பயங்கரவாதத்துக்கு மதம் இல்லை’: இன்ஃப்ளூயன்சர் தான்யா கருத்து
April 25, 2025, 5:40 pm
மலேசியக் கலைஞரும் பாடகருமான சிவக்குமார் ஜெயபாலன் இன்று காலமானார்
April 25, 2025, 12:06 pm
நடிகர் சூர்யாவின் ரெட்ரோ திரைப்படம்: மலேசியாவில் DMY CREATIONS வெளியிடுகிறது
April 23, 2025, 3:19 pm