செய்திகள் வணிகம்
துபாய் அனைத்துலக பொருளாதார மாநாட்டில் 2,000 பேர் பங்கேற்பு: அபுபக்கர்
கோலாலம்பூர்:
துபாய் அனைத்துலக பொருளாதார மாநாட்டில் உலக நாடுகளில் இருந்து 2 ஆயிரம் பேர் பங்கேற்கவுள்ளனர் அம்மாநாட்டின் உதவித் தலைவர் (பிரசிடெண்ட்) அ. அபுபக்கர் கூறினார்.
உலகத் தமிழர் பொருளாதாரம் மன்றம், சென்னை வளர்ச்சி கழகம் ஆகியவை இணைந்து இந்த உலகப் பொருளாதார மாநாட்டை கடந்த எட்டு ஆண்டுகளாக நடத்தி வருகிறது.
அவ்வகையில் ஒன்பதாவது மாநாடு வரும் மார்ச் 18 முதல் 20 ஆம் தேதி வரை துபாய் உலக வர்த்தக மையத்தில் இந்த மாநாடு நடைபெற உள்ளது.
உலக நாடுகளில் இருந்து 2,000த்திற்கும் மேற்பட்டோர் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர்.
கடந்த மாநாடுகளுக்கு மலேசியாவில் இருந்து சிறப்பான ஆதரவு கிடைத்து உள்ளது.
மறைந்த முன்னாள் மஇகா தேசியத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான துன் சாமிவேலு எங்களுக்கு பெரும் ஆதரவாக இருந்துள்ளார்.
இதே போன்று இவ்வாண்டு மாநாட்டிற்கும் மலேசியாவில் இருந்து முழு ஆதரவு கிடைக்கும் என நம்புகிறோம்.
குறிப்பாக 500க்கும் மேற்பட்ட பேராளர்கள் மலேசியாவில் இருந்து வருவார்கள் என்ற நம்பிக்கை தமக்கு உள்ளதாக பிரசிடெண்ட் அபுபக்கர் கூறினார்.
180 நாடுகளைச் சேர்ந்த மக்கள் துபாயில் வசித்து வருகின்றனர். இதில் 35 லட்சம் பேர் இந்தியர்களாவர். அதிலும் கிட்டத்தட்ட 15 லட்சம் பேர் தமிழர்களாவர்.
இப்படிப்பட்ட ஒரு மண்ணில் இந்த உலகப் பொருளாதார மாநாட்டை நடத்துவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்.
மலேசியாவை தவிர்த்து உலகளாவியிலிருந்து வரும் பேராளர்களை வரவேற்க நாங்கள் காத்திருக்கிறோம்.
குறிப்பாக, உலகம் முழுவதும் பறந்து கிடக்கும் இந்திய - தமிழ் வர்த்தகர்களிடையே ஒரு கூட்டுறவை ஏற்படுத்தும் நோக்கில்தான் மாநாடு நடைபெறுகிறது.
இந்த மாநாட்டின் மூலம் தங்களின் வர்த்தகத்தையும் அவர்கள் மேம்படுத்திக் கொள்ளலாம்.
அதேவேளையில் கண்காட்சி, சிறப்பு விவாதங்கள், சொற்பொழிவுகள், விருது வழங்குதல், கலை நிகழ்ச்சி என பல நிகழ்வுகள் இம்மாநாட்டில் மிகவும் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
உலகப் பொருளாதார மாநாட்டில் தமிழ்நாட்டில் இருந்து ஏழு அமைச்சர்கள், ஒன்றிய அரசாங்கத்தில் இருந்து அமைச்சர்கள், பன்னட்டுத் தலைவர்கள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
உலக வர்த்தகர்களை ஒன்றிணைக்கும் மலேசியத் தலைவர்கள், வர்த்தக பிரமுகர்கள் என அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்பதே எங்களின் நோக்கம்.
உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் ஒன்றிணையும் போது அது மிகப்பெரிய வர்த்தக வளர்ச்சியாக அது மாறும்.
அப்படிப்பட்ட ஒரு முயற்சிதான் இந்த மாநாடு என்று அபூபக்கர் கூறினார்.
இம்மாநாடு குறித்த மேல்விவரங்களுக்கு www.economic.conference.com.in எனும் அகப்பக்கத்தை வலம் வரலாம்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 11, 2026, 4:22 pm
ஃபேன்சி அகாடாமி அணிச்சல், பேக்கரி துறையில் திறமையான சாதனையாளர்களை உருவாக்கும்: விக்னேஸ்வரி நம்பிக்கை
September 11, 2026, 3:07 pm
இந்தியாவில் iPhone விலை 41% வரை அதிகரிப்பு
September 6, 2026, 5:39 pm
சிங்கப்பூரில் curry puff வாங்க சீனாவிலிருந்து வந்த விநியோக ஊழியர்
September 2, 2026, 4:36 pm
இந்தியாவின் முன்னணி பெருங்காய நிறுவனங்களான எல்ஜி, எவரெஸ்ட் நிறுவனப் பெருங்காயங்கள் விற்பனைக்கு தடை
August 31, 2026, 8:14 pm
சிங்கப்பூரில் உத்தரவாதமில்லாக் கடன் பெறுவோர் - மறுபரிசீலனை செய்ய 3 நாள் அவகாசம்
August 30, 2026, 9:46 pm
கே8 சரக்குகளைக் கையாள்வது குறித்து அரசும், ஏஜென்சிகளும் தெளிவுபடுத்த வேண்டும்
August 26, 2026, 11:58 am
சிங்கப்பூர் ஏர்லைன்சிடம் US$1.5 பில்லியன் கோரும் ஏர் இந்தியா
August 26, 2026, 10:03 am
கோவில்பட்டி கடலைமிட்டாய் விலையை 25 சதவீதம் உயர்த்த முடிவு
August 23, 2026, 11:18 am
