
செய்திகள் தமிழ் தொடர்புகள்
தமிழக போலீஸார் தேடிய வதந்தி பரப்பிய பிரசாந்த் குமார் தில்லி நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றார்
புது டெல்லி:
தமிழகத்தில் வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பியதாக தமிழக போலீஸாரால் தேடப்படும் பாஜக செய்தித்தொடர்பாளரும் வழக்குரைஞர் பிரசாந்த் குமார் உம்ராவுக்கு வரும் 20ஆம் தேதி வரையில் முன்ஜாமீன் வழங்கி தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த அவகாசத்தில் அவர் தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி முறையிடவும் உத்தரவிட்டது.
தமிழகத்தில் ஹிந்தி பேசும் வடமாநிலத்தவர்கள் 15 பேரை கட்டி வைத்து அடித்ததில் 12 பேர் உயிரிழந்துவிட்டனர்.
அந்த மாநில முதல்வருடன் பிகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் நெருக்கமாக பழகுகிறார் என்று இருவரிடன் படத்தை பிரசாந்த் குமார் உம்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இது தமிழகத்தில் உள்ள வடமாநிலத்தவர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து, பிரசாந்த் குமார் உம்ரா உள்பட நான்கு பேர் மீது வழக்குப் பதிவு செய்த தமிழக போலீஸார் அவர்களை கைது செய்ய தில்லி சென்றனர். பிரசாந்த் குமார் உம்ரா தில்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு நீதிபதி ஜஸ்மீத் சிங் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர்கள், தவறான தகவலை பரப்பிவிட்டு பின்னர் பிரசாந்த் அழித்துள்ளார். அவர் மீது கடும் குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்தியாவை துண்டாட அவர் தேச விரோத செயலில் ஈடுபட்டுள்ளார்.
பிரசாந்த மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள தூத்துக்குடி நீதிமன்றத்தை திருவனந்தபுரம் வழியாக விமானம் மூலம் ஒரே நாளில் சென்றடைந்து முன் ஜாமீன் கோராமல் தில்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் என்றார்.
இதைக் கேட்ட நீதிபதி ஸ்மீத் சிங், "பிரசாந்த தன்னுடைய நிரந்தர முகவரி, கைப்பேசி எண், எங்கு உள்ளார் என்பதைக் காண்பிக்கும் "கூகுள் பின்' ஆகியவற்றை தமிழக அரசு வழக்குரைஞரிடம் சமர்ப்பிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை அணுக மார்ச் 20 வரையில் முன்ஜாமீன் வழங்கப்படுகிறது' என்று உத்தரவிட்டார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 11, 2025, 5:07 pm
இஸ்லாமியர்களுக்கு எதிரான எல்லா வன்முறைகளும் பயங்கரவாதம் தான்: தொல் திருமாவளவன்
May 11, 2025, 4:12 pm