
செய்திகள் தமிழ் தொடர்புகள்
கரிகாற் சோழன் விருது 2021 & 2022
சென்னை:
மலேசியா, சிங்கப்பூர், இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த படைப்பாளிகளின் நூல்கள் கரிகாற் சோழன் விருதுக்கு வரவேற்கப்படுகின்றன என்று முஸ்தபா அறக்கட்டளை நிறுவனத்தின் தோற்றுனர் முஸ்தஃபா கூறினார்.
எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளின் 4 பிரதிகளை மே 30ஆம் தேதிதிக்குள் சென்னை கவிக்கோ மன்றத்திற்கு அனுப்பி வைக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
விருதுக்குரிய நூல்களை முஸ்தபா தமிழ் அறக்கட்டளை, கோ சாரங்கபாணி ஆய்வு இருக்கை, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் ஆகியோரால் நியமிக்கப்பட்டுள்ள நீதிபதிகள் தேர்ந்தெடுப்பார்கள்.
தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த நூலுக்குரிய ஆசிரியருக்கு முஸ்தபா தமிழ் அறக்கட்டளை சார்பில் பரிசளித்து சிறப்பிக்கப்படும்.
ஒவ்வோர் ஆண்டும் வெவ்வேறு நாடுகளில் விழா எடுத்து படைப்பாளிகளை சிறப்பு செய்வதை முஸ்தபா தமிழ் அறக்கட்டளை பல ஆண்டுகளாக செய்து வருகிறது.
படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
கவிக்கோ மன்றம்
6, இரண்டாவது மெயின் ரோடு, சி.ஐ.டி. காலனி,
மயிலாப்பூர். சென்னை. 600 004.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
May 11, 2025, 5:07 pm
இஸ்லாமியர்களுக்கு எதிரான எல்லா வன்முறைகளும் பயங்கரவாதம் தான்: தொல் திருமாவளவன்
May 11, 2025, 4:12 pm