
செய்திகள் தொழில்நுட்பம்
10,000 கேரக்டர்களில் பயனர்கள் ட்வீட் செய்யலாம்: எலான் மஸ்க் அறிவிப்பு
சான் பிரான்சிஸ்கோ:
ட்விட்டர் தளத்தில் வெகு விரைவில் பயனர்கள் சுமார் 10,000 கேரக்டர்களில் ட்வீட் செய்ய முடியும் என எலான் மஸ்க் அறிவித்துள்ளார். இந்த அம்சம் குறித்த அறிவிப்பை ட்வீட் மூலம் மஸ்க் பகிர்ந்துள்ளார்.
மனதில் பட்ட கருத்துகளை சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் சமூக வலைதளமாக விளங்குகிறது ட்விட்டர் தளம். பயனர்கள் வழக்கமாக இதில் 280 கேரக்டர்களில் ட்வீட் செய்ய முடியும்.
தற்போது நீல சந்தா கட்டணம் செலுத்தி வரும் பயனர்கள் சுமார் 4,000 கேரக்டர்களில் ட்வீட் செய்ய முடியும். இந்நிலையில், மஸ்க் இந்த புதிய அம்சம் குறித்து தெரிவித்துள்ளார்.
தங்கள் தளத்தில் 10,000 கேரக்டர்களில் ட்வீட் செய்யும் புதிய அம்சம் விரைவில் அறிமுகமாகும் என்றும், அது சார்ந்த பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு உள்ளதாகவும் மஸ்க் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு அவர் ட்விட்டர் தளத்தை வாங்கியது முதலே புதுப்புது அப்டேட்களை கொடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே நேரத்தில் ஊழியர்களையும் கணிசமாக குறைக்கும் நடவடிக்கையை அவர் பின்பற்றி வருகிறார்.
இந்த 10,000 கேரக்டர் அம்சம் அனைத்து பயனர்களின் பயன்பாட்டுக்கும் கிடைக்குமா என்ற விவரம் ஏதும் இப்போதைக்கு தெரிவிக்கப்படவில்லை. அதேபோல இது எப்போது அறிமுகமாகும் என்ற டைம்லைன் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
- செய்திப்பிரிவு
தொடர்புடைய செய்திகள்
September 8, 2025, 9:14 pm
சைபர் செக்கியூரிட்டி மலேசியாவின் முதல் வாகன தடயவியல் ஆய்வகத்தை கோபிந்த் சிங் தொடக்கி வைத்தார்
August 25, 2025, 8:03 pm
ககன்யான் திட்டத்தில் இந்தியா முக்கிய சோதனை
August 15, 2025, 12:02 am
நிலவில் அணு மின் நிலையம்: விரைவுபடுத்துகிறது நாசா
August 9, 2025, 2:54 pm
பிரபல அமெரிக்க விண்வெளி வீரர் ஜிம் லோவெல் காலமானார்
July 31, 2025, 10:18 pm
ரூ.12,000 கோடியிலான இஸ்ரோ - நாசாவின் நிசார் செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்
July 28, 2025, 1:37 pm
ரூ.30,000 கோடியில் தமிழ்நாட்டில் ஆப்பிள் நிறுவனத்துக்கான மின்னணு உதிரிபாக தொழிற்சாலை
July 28, 2025, 10:50 am
ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவுவதால் மீனவா்கள் கடலுக்கு செல்ல தடை
July 16, 2025, 5:58 pm