நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தொழில்நுட்பம்

By
|
பகிர்

சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்த UAE, அமெரிக்க, ரஷிய வீரர்கள்

கனாவெரல்:

அமெரிக்கா, ரஷியா, ஐக்கிய அரபு அமீரக நாடுகளைச் சேர்ந்த 4 விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தை வெற்றிகரமாக சென்றடைந்தனர்.

எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் விண்கலம் மூலம் அவர் சென்றனர்.  டிராகன் விண்கலம், சர்வதேச விண்வெளி நிலையத்தில் வெற்றிகரமாக இணைக்கப்பட்டது.

அமெரிக்காவின் ஸ்டீஃபன் போவன் மற்றும் வாரன் ஹோபர்க், ரஷியாவைச் சேர்ந்த ஆண்ட்ரே ஃபெத்யேவ், ஐக்கிய அரபு அமீரகத்தின் அல்-நெயாடி ஆகியோர் அந்த விண்கலத்தில் இருந்தனர்.

SpaceX launches UAE, US, Russian astronauts on voyage to space station |  Arab News

அங்கு ஏற்கெனவே தங்கி ஆய்வுகளை மேற்கொண்டு வந்த அமெரிக்காவின் ஃபிராங்க் ரூபியோ, ரஷியாவின் செர்கேய் ப்ரோகோபியேவ் மற்றும் டிமித்ரி பீட்டலின் ஆகிய மூவருக்கு பதிலாக அவர்கள் ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளனர்.

அல்-நெயாடி சர்வதேச விண்வெளி நிலையத்தில் மாதக் கணக்கில் தங்கப் போகும் முதல் ஐக்கிய அரபு அமீரக நாட்டின் முதல் விண்வெளி வீரர் ஆவார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset