நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தொழில்நுட்பம்

By
|
பகிர்

விரைவில் கூகுளின் Bard "பார்ட்': சுந்தர் பிச்சை அறிவிப்பு

நியூயார்க்:

மைக்ரோசாப்டின் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தளமான "சாட் ஜிபிடி'க்கு போட்டியாக "பார்ட்' Bard டை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது.

தகவல் தொழில்நுட்ப உலகில் செயற்கை நுண்ணறிவு(ஏ.ஐ.) தளமான "சாட் ஜிபிடி' கடந்த நவம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது.

பயனாளிகள் கேட்கும் கேள்விக்கு துல்லியமான பதில் அளிக்கும் சாட் ஜிபிடியின் திறன் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறது.

சாட் ஜிபிடிக்கு போட்டியாக கூகுள் சார்பில் "பார்ட்' என்னும் புதிய தளத்தை அறிமுகப்படுத்தப் போவதாக அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை அறிவித்துள்ளார்.

நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி குறித்து 9 வயது மாணவருக்கு புரியும் வகையில் கடினமான தகவல்களும் எளிமையாக்கி தரப்படும். உலகெங்கிலும் உள்ள அனைவரும் அறிவைப் பெறுவதை உறுதிப்படுத்தும் வகையில் அனைத்து மொழிகளிலும் தகவல்கள் கிடைக்க வழி செய்யப்படும்.

துணிச்சலான புதுமையுடன், அணுகுமுறையில் பொறுப்பாக பார்ட் செயல்படும் என சுந்தர் பிச்சை தெரிவித்தார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset