நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

மன்மோகன் சிங்குக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

லண்டன்: 

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்குவாழ்நாள் சாதனையாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனில் உள்ள பல்கலைக்கழகங்களில் பயின்ற இந்திய மாணவர்களின் சாதனைகளை கௌரவிக்கும் விதமாக, இந்திய - பிரிட்டன் சாதனையாளர்கள் விருதை தேசிய இந்திய மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் சங்கம் இந்தியாவில் உள்ள பிரிட்டிஷ் கவுன்சில், பிரிட்டனின் சர்வதேச வர்த்தகத் துறை உள்ளிட்டவை இணைந்து வழங்குகின்றறன.

பிரிட்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் மற்றும் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகங்களில் முன்னாள் மாணவரான பிரதமர் மன்மோகன் சிங்குக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது பிரிட்டன் தலைநகர் லண்டனில் நடைபெற்ற நிகழ்வில் அறிவிக்கப்பட்டது.

இந்த விருது, தில்லியில் உள்ள மன்மோகன் சிங்குக்கு அந்த மாணவர் சங்கம் மூலம் வழங்கப்படும்.

பொருளாதார நிபுணரான மன்மோகன் சிங், 2004 முதல் 2014 வரையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சிக் காலத்தில் பிரதமராகப் பதவி வகித்தார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset