நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

வருமான வரி உச்சவரம்பு ரூ. 7 லட்சமாக அதிகரிப்பு

புது டெல்லி:  

வருமான வரி விலக்கு உச்சவரம்பு ஆண்டுக்கு ரூ. 7 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். 

ஏற்கனவே ரூ.5 லட்சம் வரை இருந்த வரம்பு தற்போது ரூ. 7 லட்சம் ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

2023-24 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

அனைவரும் எதிர்பார்த்து இருந்த தனி நபர் வருமான வரி பிரிவில் 5 முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.

7 லட்சம் வரையில் டாக்ஸ் ரிபேட் (Tax rebate)அறிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது 5 லட்சமாக உள்ளது.

அனைத்து மாத சம்பளக்காரர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் standard deduction சலுகை புதிய வருமான வரி விதிப்பு கீழ் 52500 ரூபாய் அளிக்கப்படுகிறது.

 உவகிலேயே இந்தியாவில் தான் அதிகப்படியான வருமான வரி விதிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் அதிகப்படியான வரி 42 சதவீதமாக உள்ளது.

இந்த நிலையில் வருமான வரி விதிப்பில் இருக்கும் சர்சார்ஜ் அளவீட்டை 37 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாகக் குறைக்கப்பட்டு உள்ளது.

இதன் மூலம் தற்போது அதிகப்படியான வரி விதிப்பு 39 சதவீதமாகக் குறைய உள்ளது

புதிய வருமான வரி விதிப்பு 

0 - 300000 : 0 சதவீத வரி

300000-600000 : 5 சதவீத வரி

600000 -900000 : 10 சதவீத வரி

900000 - 1200000 : 15 சதவீத வரி

1200000 -1500000 : 20சதவீத வரி

15 above : 30 சதவீத வரி

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset