
செய்திகள் இந்தியா
நாடு முழுவதும் 50 புதிய விமான நிலையங்கள்; பட்ஜெட்டில் நிர்மலா அறிவித்தவுடன், அவை அதானிக்கா என எதிர்க்கட்சிகள் முழக்கம்
புதுடெல்லி:
இந்தியப் பொருளாதார வளர்ச்சியை 7 இன்ஜின்களை செலுத்தி உறுதி செய்யவிருக்கிறோம் என்று மத்திய பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
அனைவருக்குமான வளர்ச்சி என்ற நோக்கில் உள்கட்டமைப்பு உள்ளிட்ட 7 அம்சங்களுக்கு பட்ஜெட்டில் முக்கியதுவம் வழங்கப்பட்டுள்ளது என்றார் அவர்
2023-24 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதன்கிழமை தாக்கல் செய்தார்.
அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் மோடி தலைமையில் தாக்கல் செய்யப்படும் முழு ஆண்டுக்கான கடைசி பட்ஜெட் இதுவாகும். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் உரையின் முக்கிய அம்சங்கள்:
7 இன்ஜின்கள்: இந்தியப் பொருளாதார வளர்ச்சியை 7 இன்ஜின்களை செலுத்தி உறுதி செய்யவிருக்கிறோம். சாலைகள், ரயில்வே, விமான நிலையங்கள், துறைமுகங்கள், பொது போக்குவரத்து, நீர்நிலைகள், கட்டுமானம், லாஜிஸ்டிக்ஸ் ஆகிய 7 இன்ஜின்களை இணைத்து செயல்படுத்தி இந்தியாவின் வளர்ச்சியை உறுதி செய்வோம்.
இதற்கு எரிசக்தி பகிர்மானம், தகவல்கள் தொழில்நுட்பம், சமூக கட்டமைப்பு, நீர்நிலை பாதுகாப்பு துறைகள் துணையாக இருக்கும்.
சுகாதாரத் துறை: நாடு முழுவதும் 157 மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையாக அதே இடங்களில் 157 நர்ஸிங் கல்லூரிகள் அமைக்கப்படும்.
ஐசிஎம்ஆர் பரிசோதனைக் கூடங்களில் தனியார் நிறுவன ஆய்வுகளும் ஊக்குவிக்கப்படும். மருந்துத் துறையில் புதிய ஆராய்ச்சிகள் கண்டுபிடிப்புகள் ஊக்குவிக்கப்படும்.
வேளாண் துறை: வேளாண் பெருமக்கள் நலன் கருதி கால்நடை வளர்ப்பு, பால்வளம், மீன்வளத் துறை மேம்பாட்டுக்காக ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்திய சிறுதானிய ஆராய்ச்சி மையத்திற்கு மத்திய அரசின் உதவி அளிக்கப்படும்
தேசிய டிஜிட்டல் நூலகம்: குழந்தைகள், பதின்ம வயதினர் நலனுக்காக தேசிய அளவில் டிஜிட்டல் நூலகம் அமைக்கப்படும். புவியியல், மொழி எனப் பல்வேறு துறை சார்ந்த நல்ல தரமான நூல்கள் அதில் வழங்கப்படும். மாநில அரசுகள் நூலகங்களை அதிகளவில் அமைக்க ஊக்குவிக்கப்படும்.
நாடு முழுவதும் புதிதாக 50 விமான நிலையங்கள், ஹெலிகாப்டர் தளங்கள் அமைக்கப்படும்.
ஆதார், பான், டிஜிலாக்கர் ஆகியவை தனிநபர் அடையாளத்திற்காக ஊக்குவிக்கப்படும்.
* நலிந்துபோன சிறுதொழில் நிறுவனங்களை ஊக்குவிக்க தனியாக நிதி ஒதுக்கீடு செய்யப்படும். சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கான தனி டிஜிலாக்கர் முறை உருவாக்கப்படும்.
- * நலிந்துபோன சிறுதொழில் நிறுவனங்களை ஊக்குவிக்க தனியாக நிதி ஒதுக்கீடு செய்யப்படும். சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கான தனி டிஜிலாக்கர் முறை உருவாக்கப்படும்.
- * உயர் தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் விதமாக 3 செயற்கை நுண்ணறிவு ஆய்வுக் கூடங்கள் அமைக்கப்படும்.
- * நகர்ப்புற கட்டமைப்பு வளர்ச்சிக்காக ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படும்.
- * போக்குவரத்து திட்டங்களை நிறைவேற்ற ரூ.75 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படும்.
- நாடு முழுவதும் 50 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் நிர்மலா அறிவித்தவுடன் புதிய விமான நிலையங்கள் அதானிக்கா என எதிர்க்கட்சிகள் முழக்கம் எழுப்பி நாடாளுமன்றத்தை அதிரச் செய்தனர்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
March 22, 2023, 1:43 pm
ஹிந்துத்துவம் குறித்து ட்விட்டரில் கருத்து: கன்னட நடிகர் கைது
March 22, 2023, 12:03 am
10 பேருக்கு விமானங்களில் பறக்க தடை
March 21, 2023, 10:01 pm
ஏடிஎம்களில் ரூ.2,000 நோட்டுகள் வராதது ஏன்?
March 21, 2023, 9:24 pm
கேரள மார்க்சிஸ்ட் எம்எல்ஏ வெற்றி செல்லாது
March 19, 2023, 6:40 pm
பிரதமர் அலுவலக அதிகாரி எனக் கூறி இஸட் பிளஸ் பாதுகாப்புடன் வலம்வந்த குஜராத் நபர் பலே மோசடி
March 19, 2023, 5:47 pm
கிழக்கு லடாக் பகுதியில் பதற்றம் நீடிக்கிறது
March 18, 2023, 4:04 pm
பிரதமர் மோடி மீது காங்கிரஸ் உரிமை மீறல் நோட்டீஸ்
March 17, 2023, 4:10 pm
அதானி விவகாரத்தில் தப்பிக்கவே பாஜக நாடாளுமன்றத்தை முடக்குகிறது: காங்கிரஸ் தலைவர்
March 17, 2023, 3:49 pm
எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் ஒரே நிலைதான்: மெஹபூபா முஃப்தி
March 16, 2023, 2:01 pm