நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனை விருதுகளை அஸிசூல்ஹஸ்னி - பண்டலேலா வென்றனர்

கோலாலம்பூர்:

நாட்டின் சிறந்த விளையாட்டு வீரர் - வீராங்கனைக்கான விருதுகளை அஸிசூல் ஹஸ்னி, பண்டலேலா ரினோங் ஆகியோர் வென்றனர்.

2021ஆம் ஆண்டுக்கான சிறந்த வீரர் - வீராங்கனைக்கான விருதளிப்பு விழா தலைநகரில் நடைபெற்றது.

இதில் சிறந்த வீரருக்கான விருதை உள்ளரங்கு சைக்கிளோட்ட வீரர் டத்தோ அஸிசூல் ஹஸ்னி அவாங் வென்றார்.

5ஆவது முறையாக அவர் இவ்விருதை வென்றுள்ளார். இதற்கு முன் 2009, 2010, 2017, 2019/20 ஆகிய ஆண்டுகளில் அவர் அவ்விருதை வென்றுள்ளார்.

சிறந்த வீராங்கனைக்கான விருதை முக்குளிப்பு நீச்சல் வீராங்கனை டத்தோ பண்டலேலா ரினோங் வென்றார்.

சிறந்த பாராலிம்பிக் வீரருக்கான விருதை போன்னி புன்யாவ் கஸ்டின் வென்றார். சிறந்த வீராங்கனைக்கான விருதை பிரேன்டா அனெலியா வென்றார்.

வெற்றி பெற்றவர்களுக்கான விருதை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் எடுத்து வழங்கி சிறப்பித்தார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset