செய்திகள் உலகம்
தாய்லாந்தில் கோர விபத்து: 11 பேர் உடல் கருகி பலி
பேங்காக்:
தாய்லாந்தில் சாலை தடுப்பு வேலியில் மோதி தீப்பிடித்ததால், வேனில் இருந்த 11 பேர் உடல் கருகி பலியாகினர்.
தாய்லாந்து நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள அம்னாட் சரோயன் மாநிலத்தில் இருந்து நகோன் பாத்தோம் மாநிலத்திற்கு வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது.
வேனில் 2 சிறுவர்கள் உள்பட 12 பேர் இருந்தனர்.
எரி வாயு மூலம் இயங்கும் இந்த வேன் தலைநகர் பாங்காங் அருகே ஷி கியூ மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது.
இதனால், தறிக்கெட்டு ஓடிய வேன் சாலையின் நடுவே இருந்த தடுப்பு வேலியின் மீது பயங்கரமாக மோதியது.
மோதிய வேகத்தில் வேனில் இருந்த கியாஸ் சிலிண்டர் வெடித்து வேனில் தீப்பிடித்தது.
தீ பரவுவதற்கு முன்பு 20 வயது இளைஞர் ஒருவர் மட்டும் வேனில் இருந்து வெளியே குதித்து உயிர் தப்பினார்.
சிறுவர்கள் உள்பட மற்ற 11 வெளியேற முடியாமல் வேனுக்குள் சிக்கினர். இதில் அவர்கள் 11 பேரும் தீயில் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 21, 2026, 12:23 pm
வரலாற்றுச் சிறப்புமிக்க தாக்குதலில் அமெரிக்காவின் F-35 ஸ்டெல்த் ஜெட்டை ஈரான் வீழ்த்தியது
March 21, 2026, 12:17 pm
அமெரிக்காவிற்கு 'இல்லை' என்று சொல்லும் துணிச்சலை இலங்கை காட்டுகிறது
March 21, 2026, 12:14 pm
"பண்டிகை இருக்கு.. ஆனால் கொண்டாட வழியில்லை": காசாவில் பொலிவிழந்த ஈகைத் திருநாள்
March 21, 2026, 9:29 am
தென் கொரியாவில் தொழிற்சாலை தீ விபத்து
March 21, 2026, 9:27 am
போர் இருந்தபோதிலும் ஈரான் ஏவுகணைகளைத் தொடர்ந்து உற்பத்தி செய்கிறது
March 20, 2026, 10:13 pm
"பணத்திற்காக பெட்டி சுமந்தேன்": வெளிநாட்டில் போதைப்பொருள் கடத்திய மலேசியர் கைது
March 20, 2026, 5:41 pm
ராயல் கிங்ஸ் சமூக இஃப்தார், சிங்கப்பூரின் இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை வளர்க்கிறது
March 20, 2026, 4:13 pm
