
செய்திகள் மலேசியா
அனைத்துலக இஸ்லாமியக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா 1,000 மாணவர்கள் பட்டம் பெற்றனர்
கோலாலம்பூர்:
அனைத்துலக இஸ்லாமியக் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் 1,000 மாணவர்கள் பட்டம் பெற்றனர்.
நாட்டில் முன்னணி கல்லூரிகளில் ஒன்றான அனைத்துலக இஸ்லாமிய கல்லூரியின் 14ஆவது பட்டமளிப்பு அண்மையில் நடைபெற்றது.
கல்லூரியின் புரவலர் தம்பின் துங்கு பெசார் துங்கு சைட் ரஹ்மான் துங்கு சைட் இட்ரூஸ் அல் கடாரி இந்த விழாவிற்கு தலைமையேற்றார்.
அவருடன் கல்லூரி குழுமத் தலைவர் நிக் முஸ்தஃபா, தலைமை செயல்முறை அதிகாரி ஷேக் ஃபரிதுதீன் ஆகியோரும் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் கிட்டத்தட்ட 1,000 மாணவர்கள் பல்வேறு துறைகளில் பட்டம் பெற்றனர்.
இந்த அனைத்துலக இஸ்லாமியக் கல்லூரி 22 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்ப்பட்டு வருகிறது.
இக் கல்லூரியில் பாலர் கல்வி, சட்டக் கல்வி ஆகியவற்றுக்கான டிப்ளோமா கல்வியை மாணவர்கள் அதிகம் தேர்வு செய்து பயில்கின்றனர்.
இக் கல்லூரியில் பல்லின மாணவ மாணவிகள் அதிகம் பயில்கின்றனர். குறிப்பாக இந்திய மாணவர்களும் இந்தக் கல்லூரியைத் தேர்ந்தெடுத்து கல்வி பயில்கின்றனர் என்று தலைமை செயல்முறை அதிகாரி ஷேக் ஃபரிதுதீன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 1, 2025, 11:33 pm
மாணவி மணிஷாப்ரீத் கொலை வழக்கு; 48 மணி நேரத்திற்குள் தீர்க்கப்பட்டது: ஹுசைன் ஒமார் கான்
July 1, 2025, 11:28 pm
ஹிஷாமுடினின் இடைநீக்கம் குறித்து அம்னோ உச்சமன்றம் விவாதிக்கவில்லை: ஜாஹித்
July 1, 2025, 10:48 pm