நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

புறப்பட்ட சில நிமிடங்களிலேயே தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்

திருவனந்தபுரம்:

திருவனந்தபுரத்திலிருந்து ஓமன் நாட்டுக்கு புறப்பட்ட ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதையடுத்து, புறப்பட்ட சிறிது நிமிஷங்களிலேயே விமானம் அவசரகமாகத் தரையிறக்கப்பட்டது.

கேரளத் தலைநகா் திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டு ஓமன் நாட்டின் மஸ்கட் நகருக்கு செல்ல வேண்டிய ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் (ஐ. எக்ஸ்.549) திட்டமிட்டப்படி காலை 8:30 மணிக்கு புறப்பட்டது. அப்போது விமானத்தின் கணினி அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறை விமானி கவனித்தாா்.

அசாம்பவிதங்களைத் தவிா்க்க திருவனந்தபுரம் சா்வதேச விமான நிலையத்திலேயே காலை 9:17 மணியளவில் விமானம் மீண்டும் தரையிறக்கப்பட்டது. 

விமானத்தில் பயணித்த 105 பயணிகளும், விமானப் பணியாளா்களும் பாதுகாப்பாக தரையிறங்கியதை அதிகாரிகள் உறுதி செய்தனா்.

பின்னா், பிற்பகல் ஒரு மணிக்கு வேறொரு விமானத்தில் 105 பயணிகளும் மஸ்கட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். மற்றொரு விமானத்தில் பயணிகள் அனுப்பிவைக்கப்படுவதை உறுதிப்படுத்தியதுடன், அவா்களுக்கு வேண்டிய அனைத்து வசதிகளைச் செய்து கொடுத்ததாக ஏா் இந்தியா நிறுவனத்துக்கு விமானப் போக்குவரத்து இயக்குநரகம் பாராட்டு தெரிவித்தது.

செய்திப்பிரிவு

தொடர்புடைய செய்திகள்

+ - reset