நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

உலகின் மதிப்புமிக்க நிறுவனம் அமேசானுக்கு முதலிடம்

புது டெல்லி:

உலக அளவில் பிராண்ட் மதிப்பை ஆய்வு செய்யும் "பிராண்ட் ஃபைனான்ஸ்' அமைப்பு வெளியிட்ட "குளோபல் 500' அறிக்கையின் படி  அமேசான் நிறுவனம் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஆப்பிள் நிறுவனத்தை அது பின்னுக்கு தள்ளியுள்ளது.

இப் பட்டியலில் கடந்த ஆண்டு முதலிடத்தில் இருந்த ஆப்பிள் நிறுவனத்தின் பிராண்ட் மதிப்பு 16 சதவீதம் குறைறந்து 297.5 பில்லியன் அமெரிக்க டாலருடன் 2ஆம் இடத்தைப் பெற்றுள்ளது.

கடந்த ஆண்டு 2ஆம் இடத்தில் இருந்த அமேசான் நிறுவனத்தின் பிராண்ட் மதிப்பு 7 சதவீதம் மட்டுமே குறைறந்து 299.3 பில்லியன் அமெரிக்க டாலருடன் முதலிடத்தைப் பிடித்தது.

மூன்றாம் இடத்தை கூகுள், 4ஆம் இடத்தை மைக்ரோசாஃப்ட், 5ஆம் இடத்தை வால்மார்ட், 6ஆம் இடத்தை சாம்சங், 9ஆம் இடத்தை டெஸ்லா, 10ஆம் இடத்தை டிக்டாக் ஆகியவை பிடித்துள்ளன.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset