நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

குஜராத் கலவரம் குறித்த ஆணவப் படம்: பிபிசி மீது விசாரணை கோரி மனு

லண்டன்:

குஜராத்தில் 2002இல் நடைபெற்ற கலவரம் தொடர்பாக அந்த மாநில முதல்வராக இருந்த பிரதமர் நரேந்திர மோடி குறித்த ஆவணப் படத்தை பிபிசி செய்தி நிறுவனம் வெளியிட்டது

தொடர்பாக விசாரணை நடத்த வலியுறுத்தி பிரிட்டனின் ஊடக கண்காணிப்பு அமைப்பிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

"இந்தியா: தி மோடி க்வெஸ்டின்' என்ற இரு பாகங்களைக் கொண்ட அந்த ஆவணப் படத்தின் முதல் பாகம் கடந்த வாரம் ஒளிபரப்பானது. இதில் குஜராத் கலவரத்தில் பிரதமர் மோடிக்கு நேரடி தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பிரிட்டன் நாட்டின் ஊடக கண்காணிப்பு அமைப்பிடம் அளிக்கப்பட்ட 2,500 பேர் கையொழுத்திட்ட மனுவில், இரு பாகங்களைக் கொண்ட அந்த ஆவணப் படத்தில் நடுநிலைமையுடன் உயர்ந்த தரத்தில் தகவல் வழங்கப்படவில்லை. இது குறித்து பிபிசியிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும்.

பிபிசி நிர்வாகக் குழுவும் இந்த ஆவணப் படம் தொடர்பாக தனியாக விசாரணை நடத்த வேண்டும்.

குஜராத் கலவரம் தொடர்பாக பிரதமர் மோடி மீது குற்றறச்சாட்டு முன்வைக்கப்பட்ட நிலையில், விரிவான விசாரணைகளுக்குப் பின்னர் இந்திய உச்சநீதிமன்றம் அந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துவிட்டது.

இரு தசாப்தங்களுக்குப் பிறகு மீண்டும் அந்த விவகாரத்தை எழுப்ப பிபிசி முயற்சிக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset