நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

கேரளத்தில் குழந்தைகளுக்கு நோரோ வைரஸ்

கொச்சி:

கேரளத்தின் காக்கநாடு பகுதியைச் சேர்ந்த 2 குழந்தைகளுக்கு நோரோ வைரஸ் பாதித்துள்ளது.

வாந்தி, பேதி உள்ளிட்டவை நோரோ  வைரஸ் அறிகுறிகளாகும்.  உலகம் முழுவதும் ஆண்டுதோறும் 68.5 கோடி பேர் நோரோ  வைரஸால் பாதிக்கப்படுகின்றனர். அதில் 20 கோடி பேர் குழந்தைகள் ஆவர்.

கேரளத்தில் முதன்முதலாக நோரோ வைரஸ் பாதிப்பு ஆலப்புழை மாவட்டத்தில் 2021ஆம் ஆண்டு ஜூன் கண்டறியப்பட்டது. அப்போது, ஆலப்புழை நகராட்சியிலும் அதன் சுற்றியுள்ள ஊராட்சிகளிலும் 950 பேருக்கு தொற்று பாதித்தது.

தற்போது கொச்சி அருகில் உள்ள காக்கநாடு பகுதியில் பரவத் தொடங்கியுள்ளது.

அப் பகுதியின் ஒரு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும் நோரோ வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset