நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

கூகுள் நிறுவனம் 10% அபராதத் தொகையை 7 நாள்களில் செலுத்த உச்சநீதிமன்றம் உத்தரவு

புது டெல்லி:

இந்திய தொழில் போட்டி ஆணையம் CCI விதித்த ரூ.1,337.76 கோடி அபராதத்துக்கு தடை விதிக்க தேசிய நிறுவனச் சட்ட மேல்முறையீட்டு திர்ப்பாயம் மறுத்ததை எதிர்த்து கூகுள் நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை மறுப்பு தெரிவித்தது.

தீர்ப்பாயம் உத்தரவின் அடிப்படையில் அபராதத் தொகையில் 10 சதவீதத்தை 7 நாள்களில் செலுத்தவும் உச்சநீதிமன்றறம் உத்தரவிட்டது. இது கூகுள் நிறுவனத்துக்கு  பெரும் பின்னடைவாக கருதப்படும்.

பல்வேறு சந்தைகளில் ஆண்ட்ராய்ட் கைப்பேசிகள் தொடர்பான வர்த்தகத்தில் நேர்மையற்றற வழியில் செயல்பட்டதாக கூகுள் நிறுவனத்துக்கு சிசிஐ ரூ.1,337.76 கோடி அபராதம் விதித்தது.

அத்துடன் பிளேஸ்டோர் கொள்கைகளிலும் முறைகேடான செயல்களில் ஈடுபட்டதாக அந்த நிறுவனத்துக்கு சிசிஐ ரூ.936.44 கோடி அபராதம் விதித்தது.

உச்சநீதிமன்றத்தில், கூகுளின் மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்த நீதிபதிகள், சிசிஐ அபராத உத்தரவுக்கு எதிராக தேசிய நிறுவனச் சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தையே அணுகி தீர்வு பெறுமாறு கூகுள் நிறுவனத்துக்கு உத்தரவிட்டனர்.

தீப்பாயம் உத்தரவிட்டபடி சிசிஐ விதித்த ரூ. 1,337.76 கோடி அபராதத்தில் 10 சதவீதத்தை செலுத்த கூகுள் நிறுவனத்துக்கு 7 நாள்கள் அவகாசம் அளித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset