நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பேராவில் விரைவில் கவுன்சிலர்கள் நியமனம்: டத்தோஸ்ரீ சரானி முஹம்மத்

ஈப்போ:

பேரா மாநிலத்தில்   செய்யப்படவிருக்கும் கவுன்சிலர்கள் நியமனம் குறித்து மாநில அரசு விரைவில் முடிவு செய்யும் என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ சரானி முஹம்மத் கூறினார்.

பேராவில் உள்ள 15 மாவட்டங்களின் கவுன்சிலர் பதவிகள் 31-12-2022 தேதியுடன் காலியாகி விட்டன.

புதிய கவுன்சிலர் பதவிகள் ஆளும் கூட்டணி கட்சிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டியிருக்கிறது. ஆகவே கூட்டணி கட்சிகளோடு பேசி இது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படுமென்று அவர் சொன்னார்.

அதே சமயத்தில் கிராமத் தலைவர்களின் நியமனமும் இதில் அடங்கும் என்றார் அவர் 

- எம்.ஏ.அலி

தொடர்புடைய செய்திகள்

+ - reset