நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்கிறது மைக்ரோசாஃப்ட்

நியூயார்க்:

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் 10,000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட உள்ளனர் என்று அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெல்லா தெரிவித்துள்ளார்.

ஊழியர்களுக்கு அவர் அனுப்பிய இமெயிலில், கொரோனாவின்போது டிஜிட்டல் செலவினங்களை அதிகரித்த வாடிக்கையாளர்கள், தற்போது அதனை குறைத்து வருகின்றனர்.

அத்துடன் உலகின் சில பகுதிகள் பொருளாதார மந்தநிலையை எதிர்கொண்டுள்ளன. செயற்கை நுண்ணறிவின் முன்னேற்றறத்துடன் கணினி பயன்பாட்டின் அடுத்தகட்ட வளர்ச்சி உருவாகிறறது.

மைக்ரோசாஃப்ட் வருவாயுடன், அதன் செலவின கட்டமைப்பு சீரமைக்கப்பட உள்ளது.

இந்நிலையில், 2023-24 நிதியாண்டின் மூன்றவது காலாண்டுக்குள் 10,000 மைக்ரோசாஃப்ட் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவர். இது மைக்ரோசாஃப்ட் ஊழியர்களின் மொத்த எண்ணிக்கையில் 5 சதவீதத்துக்கும் குறைவாகும்.

பணிநீக்கம் செய்யப்படுவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பாக அவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்படும். இந்த நடவடிக்கையால் பாதிக்கப்படும் ஊழியர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும். அவர்களுக்கு 6 மாதங்களுக்கு மருத்துவ காப்பீடு தொடரும் என்று தெரிவித்துள்ளார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset