செய்திகள் சிந்தனைகள்
சிலாங்கூர் மாநிலத் தேர்தலில் நம்பிக்கை கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம்?: ஓர் அரசியல் பார்வை
பெட்டாலிங் ஜெயா:
இந்த ஆண்டு நடைபெறும் சிலாங்கூர் மாநிலத் தேர்தலில் நம்பிக்கை கூட்டணி வெற்றி பெறுவதற்கு வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
இருப்பினும், அகாடமி நுசாந்தராவைச் சேர்ந்த அஸ்மி ஹசன், தேசிய முன்னணி தேசியக் கூட்டணியிடம் சில தொகுதிகளை இழக்கக் கூடும் என்று தெரிவித்துள்ளார்.
தேசிய முன்னணியின் உறுப்பு கட்சியான அம்னோ அதன் வரலாற்றிலேயே தற்போது மிகவும் பலவீனமான நிலையில் உள்ளது என்று அவர் கூறினார்.
அக் கட்சியில் உயர்மட்டத் தலைவர்களான அஹ்மர் ஸாஹித் ஹமிடி, முஹம்மத் ஹசன் ஆகியோரை ஆதரிக்கும் குழுக்களுக்கும் தலைமை மாற்றத்திற்கு அழுத்தம் கொடுப்பவர்களுக்கும் இடையே பிளவு ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் அம்னோ பொதுப் பேரவை நடந்ததைத் தொடர்ந்து, பெர்சத்துக் கட்சி மாநிலத்தில் சில தொகுதிகளை வெல்லுவதற்கு சாத்தியம் இருப்பதாகத் தான் நினைப்பதாக அவர் கூறினார்.
தற்போது நம்பிக்கை கூட்டணியின் ஆட்சியில் இருக்கும் மாநில அரசாங்கத்தைக் கவிழ்க்கும் அளவிற்கு இல்லையென்றும் இந்தத் தேர்தலில் நம்பிக்கை கூட்டணியும் தேசியக் கூட்டணியும் தொகுதிகள் பகிர்வுகளின் அடிப்படையில் சிறப்பாக செயல்படும் என்று தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்த 14-ஆவது பொது தேர்தலில் ஹுலு பெர்னாம், சுங்கை புரோங், சுங்கை பஞ்சாங், சுங்கை ஏர் தவார் ஆகிய நான்கு தொகுதிகளைத் தேசிய முன்னணி தற்காத்துக் கொள்ளும் என்றும் கணித்துள்ளார்.
கடந்த வார அம்னோ பொதுப் பேரவையில், அம்னோ தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்குப் போட்டிகள் கிடையாது என்று முடிவு செய்தது 15-ஆவது பொதுத் தேர்தலில் அவர்களின் மந்தமான செயல்திறனைத் தொடர்ந்து மாற்றங்கள் செயல்படுத்தப்படுவதைக் காண விரும்பிய சிலரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
சிலாங்கூர் முன்னாள் அம்னோ தலைவர் நோ ஓமர், இரண்டு உயர் பதவிகளில் போட்டியிடுவதில்லை என்ற முடிவு, இந்த ஆண்டின் மத்தியில் நடைபெறவிருக்கும் மாநிலத் தேர்தலில் கட்சியின் வெற்றி வாய்ப்புகளைப் பாதிக்கும் என்று கவலை தெரிவித்தார்.
சிலாங்கூர் பாஸ் ஆணையர் அஹ்மத் யூனுஸ் ஹைரி, கடந்த 15-ஆவது பொதுத் தேர்தலில் நம்பிக்கை கூட்டணி, தேசிய முன்னணி வசமிருந்த ஆறு நாடாளுமன்றத் தொகுதிகளைக் கைப்பற்றிய நிலையில் மாநிலத் தேர்தலில் தேசியக் கூட்டணிக்கு வெற்றிப் பெற நல்ல வாய்ப்பு இருப்பதாக நம்பிக்கை தெரிவித்தார்.
அஸ்மி, மலாயாப் பல்கலைகழகத்தின் அரசியல் ஆய்வாளரான அவாங் அஸ்மான் பாவி சிலாங்கூர் மாநிலத் தேர்தலில் நம்பிக்கை கூட்டணி அதிகத் தொகுதிகளைக் கைப்பற்ற முடியும் என்று கணித்துள்ளார்.
15-ஆவது பொதுத் தேர்தலில் சிலாங்கூரில் நம்பிக்கை கூட்டணியின் கோட்டையாகத் திகழ்ந்த காபார், கோலா லங்காட், ஹுலு சிலாங்கூர் ஆகியத் தொகுதிகளையும் சபாக் பெர்னாம், சுங்கை பெசார், தஞ்சோங் கராங் ஆகிய நாடாளுமன்ற தொகுதிகளைத் தேசியக் கூட்டணி கைப்பற்றியது.
நம்பிக்கை கூட்டணி தேசிய முன்னனி கூட்டணியானது தேசியக் கூட்டணியைத் தோற்கடிக்க வல்லது என்பதையும் அஸ்மியும் அவாங் அஸ்மானும் ஒப்புக்கொள்கிறார்கள்.
எவ்வாறாயினும், இரண்டு கூட்டணிகளும் எந்த அளவிற்கு ஒன்றாகச் செயல்பட முடியும் என்பதைப் பொறுத்தே விஷயம் அமையும் என்று அவாங் அஸ்மான் நினைக்கிறார்.
குறிப்பாக, ஹுலு சிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதியில் இருக்கும் ஹுலு பெர்னாம், குவாலா குபு பாரு மற்றும் பாதாங் காலி சட்டமன்றத் தொகுதிகளில் கடும் போட்டி நிலவும் என்றும் அவர் கணித்துள்ளார்.
கடந்த 14-ஆவது சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் 56 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட சிலாங்கூர் மாநிலத்தில் பக்காத்தான் ஹராப்பான் 51 தொகுதிகளையும் தேசிய முன்னணி 4 தொகுதிகளையும் பாஸ் கட்சி ஒரு தொகுதியும் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
- அஷ்வினி
தொடர்புடைய செய்திகள்
November 15, 2024, 7:44 am
வேஷம் என்பது... - வெள்ளிச் சிந்தனை
November 8, 2024, 7:21 am
உலகம் சோதனைக் களம்: இங்கு கூலியை எதிர்பார்க்கக் கூடாது - வெள்ளிச் சிந்தனை
November 1, 2024, 9:31 am
நல்லவற்றையே பேசுங்கள் - வெள்ளிச் சிந்தனை
October 25, 2024, 1:14 am
சகோதர தாத்பர்யம் எப்படி இருக்க வேண்டும்? - வெள்ளிச் சிந்தனை
October 18, 2024, 8:09 am
அன்பு மகனே...! - வெள்ளிச் சிந்தனை
October 11, 2024, 8:35 am
நாம் நாமாக இருப்போம் - வெள்ளிச் சிந்தனை
September 20, 2024, 9:33 am
எதை விடுவது? - வெள்ளிச் சிந்தனை
September 16, 2024, 8:45 am
நபி பிறந்தார்..எங்கள் நபி பிறந்தார்..! - மீலாது சிறப்புக் கட்டுரை
September 13, 2024, 8:11 am
ஆணுக்கும் கற்புண்டு - வெள்ளிச் சிந்தனை
September 11, 2024, 7:57 am