நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேசிய முன்னணி முடிவால் வாக்காளர்கள் குழப்பமடைந்துள்ளனர்

கூலிம்:

தேசிய முன்னணி முடிவால் வாக்காளர்கள் குழப்பமடைந்துள்ளனர் என்று பாடாங் செராய் நாடாளுமன்ற தொகுதியின் தேசிய முன்னணி வேட்பாளர் சிவராஜ் கூறினார்.

நம்பிக்கை கூட்டணியும் தேசிய முன்னணியும் இணைந்து மத்தியில் ஆட்சியமைத்துள்ளது.

இதனால் தியோமான் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதில் இருந்து நம்பிக்கை கூட்டணி பின்வாங்கி கொண்டது.

இதே போன்று பாடாங் செராய் நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் நம்பிக்கை கூட்டணி வேட்பாளருக்கு தேசிய முன்னணி வழிவிட்டுள்ளது.

தேசிய முன்னணி முடிவால் பாடாங் செராய் தொகுதி வாக்காளர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

அத் தொகுதி வாக்காளர்கள் பலர் இன்னமும் தேசிய முன்னணிக்குத்தான் வாக்களிக்கவுள்ளதாக கூறுகின்றனர்.

ஆகையால், வெள்ளிக்கிழமை நடைபெறும் தேர்தலில் வாக்காளர்கள் நம்பிக்கை கூட்டணி வேட்பாளர்கள் வாக்களிக்க வேண்டும்.

வாக்குச் சீட்டில் என் பெயர் இருந்தாலும் எனக்கு வாக்களிக்க வேண்டாம் என்று சிவராஜ் கேட்டுக் கொண்டார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset