செய்திகள் மலேசியா
மார்க்க அறிஞர்களுக்கு அல் இம்தாத் மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்கும் விழா
கோலாலம்பூர்:
உலமாக்கள் என்றழைக்கப்படும் மார்க்க அறிஞர்களுக்கு அல் இம்தாத் மருத்துவ காப்பீட்டு திட்ட அறிமுக விழா இரண்டு மாதங்களுக்கு முன்பு மாசா பல்கலைக்கழக மண்டபத்தில் நடைபெற்றது. அதன் அடுத்த பரிணாமமாக காப்பீட்டு அட்டைகளை உரியவர்களுக்கு வழங்கும் விழா மாட்ரேட் மண்டபத்தில் நடைபெற்றது. அதனை எம்.எம்.ஒய்.சி என்றழைக்கப்படும் மலேசிய முஸ்லிம் இளைஞர்கள் அமைப்பு ஒருங்கிணைத்தது.
அல் இம்தாத் போர்டல் அறிமுகம் மற்றும் மருத்துவ காப்பீட்டு அட்டை கையளிப்பு விழாவில் எம்.எம்.ஒய்.சி.யின் ஆலோசகர் அஸ்ரின் வரவேற்புரையாற்றினார்.
துவக்கமாக சொல்லமது உஸ்தாத் கம்பம் பீர் முஹம்மத் பாகவி உருக்கமாக பிரார்த்தனை புரிந்தார். அவரைத் தொடர்ந்து மலேசிய முஸ்லிம் உணவக உரிமையாளர்கள் சங்கத் தலைவர் டத்தோ ஜவஹர் அலி வாழ்த்துரை வழங்கினார்.
நிகழ்ச்சிக்கு HRDCorp தலைமை செயலதிகாரி டத்தோ ஷாகுல் ஹமீத் தாவூத் தலைமை தாங்கி உரையாற்றினார். அவர் தனது உரையில் ஆலிம்கள் சமுதாயத்திற்கு ஆற்றிவரும் சேவைகள் குறித்தும் அவர்களை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் குறிப்பிட்டு பேசினார்.
உலமாக்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் வாயிலாக பயனளிக்கும் விதமாக இன்று அவர்களுக்கு அந்த காப்பீட்டு திட்டத்தின் அட்டைகள் வழங்கும் நிகழ்வை எம். எம். ஒய். சி ஏற்பாடு செய்துள்ளது.
எனக்கு இந்த இளைஞர்களிடம் பிடித்த விஷயமே சொல்வதை துடிப்போடு செயல்படுத்திக் காட்டும் அந்த வேகம்தான். என் உள்ளத்தில் இந்த திட்டத்தை அல்லாஹ் விதைத்தான். அதற்கு எவ்வாறு செயல்வடிவம் கொடுப்பது என்று யோசித்தேன். உரியவர்களை எனக்க அல்லாஹ்வே காட்டி கொடுத்தான்.
திருக்குறள் ஒன்று என் நினைவுக்கு வருகிறது.
இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்.
ஒரு செயலை முடிக்கத் திறன் உடையவன் என்று ஆராய்ந்து அதை அவனிடத்தில் ஒப்படைத்து விடுக என்பது இப் பாடலின் கருத்தாகும்.
அதுபோல் எம்.எம்.ஓய் சி இளைஞர்கள் அழகாக நேர்த்தியாக இந்த பணியை செய்துள்ளார்கள். அவர்களுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த திட்டத்தினால் உலமாக்கள் தங்களுடைய மருத்துவ செலவுகளை ஓரளவுக்கு நிவர்த்தி செய்து நிம்மதியாக தங்கள் பணிகளை தொடர்ந்தால் அதுவே போதுமானது.
மலேசியாவில் ஆலிம்கள், அன்றும் உழைத்தார்கள், இன்றும் உழைக்கிறார்கள். இன்ஷா அல்லாஹ் கியாமத் நாள் வரை நமது சமுதாயத்திற்கு நேர்வழி காட்டுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.
உங்கள் பணியை நீங்கள் சிறப்பாக செய்கிறீர்கள். இன்னும் சிறப்பாக செய்வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். அதற்கான உடல் ஆரோக்கியத்தையும் மன வலிமையையும் தருவானாக.
இந்த திட்டம் வெற்றி அடைய உழைத்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நான் நன்றி கூறிக்கொள்கிறேன். எங்களுக்காக நீங்கள் துவா செய்ய வேணுமாய் கேட்டுக் கொள்கிறேன்.
திருக்குர் ஆனின் 18 ஆவது அத்தியாயத்தின் 10 ஆவது வசனத்தை சொல்லி என் உரையை நிறைவு செய்கிறேன்.
"எங்கள் இறைவா! உன்னிடமிருந்து தனிப்பட்ட அருளை எங்களுக்கு வழங்குவாயாக!
எங்கள் காரியங்களில் எங்களுக்கு சீர்மை ஏற்பட வழிவகுப்பாயாக!" என்று உரையாற்றினார்.
காப்பீட்டு அட்டைகளை வழங்கும் நிகழ்வை அதிகாரப்பூர்வமாக துவக்கி வைத்தார் டத்தோஸ்ரீ முஹம்மத் இக்பால்.
அவர் தனது உரையில் எம்,எம்.சி,யின் அரும் பணிகளை பற்றியும் சேவைகளையும் பாராட்டினார். உலமாக்களின் பெரும் பணி இந்த நாட்டில் தொன்றுதொட்டு இருந்துவருவதை குறிப்பிட்டு பேசினார். இந்த மருத்துவக் காப்பீடு திட்டம் அருமையான திட்டம். இதனை செயல்படுத்திய டத்தோ ஷாகுல் ஹாமீத் பாராட்டுக்குரியவர். அஸ்ரின் அஸ்மி இருவரும் மிக சிறப்பாக இந்த இயக்கத்தை வழிநடத்தி வருகிறார்கள். அவர்கள் முன்னெடுத்த இந்தத் திட்டத்தை சமுதாய வர்த்தகர்களும் கொடைநெஞ்சம் கொண்டவர்களும் ஆதரிப்பார்கள் என்று தாம் நம்புவதாக கூறினார்.
மார்க்க அறிஞர்களான உங்கள் உடல்நலம் மற்றும் நல்வாழ்வைப் பாதுகாக்கும் ஒரே சேவை மையம் அல் இம்தாத் என்றால் அது மிகை அல்ல.
இந்தத் திட்டத்தில் 200 மார்க்க அறிஞர்கள் பயன் பெறுகிறார்கள் என்று எம்.எம்.ஒய்.சி.யின் தலைவர் அஸ்மி தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
December 24, 2024, 5:42 pm
தமிழ்ப்பள்ளிகளி்ல் சிறந்த முன்னாள் மாணவர்கள் சங்கமாக பெங்கலான் பாரு தமிழ்ப்பள்ளி தேர்வு
December 24, 2024, 5:34 pm
நல்லிணக்கத் திருநாளாக கிறிஸ்துமஸ் பண்டிகை அமையட்டும்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
December 24, 2024, 5:28 pm
சமாதானப் பெருநாளான கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒற்றுமையுடன் கொண்டாடுவோம்: டத்தோ நெல்சன்
December 24, 2024, 5:22 pm
தமராஜ், பௌஸான் ஆகியோர் சார்ஜென்டாக பதவி உயர்வு பெற்றனர்
December 24, 2024, 5:17 pm
சைட் சாடிக்கின் நீதி விசாரணைக்கான மனுவை நீதிமன்றம் நிராகரித்தது
December 24, 2024, 5:10 pm
கவர்ச்சி நடனத்தின் ஏற்பாட்டாளர் 10,000 ரிங்கிட் அபராதம் செலுத்தி மன்னிப்பு கோரினார்
December 24, 2024, 5:06 pm
சிறுவர் பாலியல் துன்புறுத்தல் உட்பட இணையத்தில் பாலியல் குற்றங்களைச் செய்த குற்றச்சாட்டில் 13 பேர் கைது
December 24, 2024, 12:31 pm