நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

செனகலை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து

டோஹா:

உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில் இங்கிலாந்து அணியினர் காலிறுதிக்கு முன்னேறி உள்ளனர்.

கத்தாரில் நடைபெற்ற நாக் அவுட் சுற்றில் இங்கிலாந்து, செனகல் அணிகள் மோதின. 

ஆட்டத்தின் ஆரம்பம் முதலே இங்கிலாந்து அணி வீரர்கள் அதிரடியாக ஆடினர்.

ஆட்டத்தின் 38ஆவது நிமிடத்தில் இங்கிலாந்தின் ஜோர்டான் ஒரு கோல் அடித்தார். 48ஆவது நிமிடத்தில் ஹாரி கேன் ஒரு கோல் அடித்தார்.

இதனால், முதல் பாதியில் அந்த அணி 2-0 என முன்னிலை வகித்தது. 

இரண்டாவது பாதியின் 57ஆவது நிமிடத்தில் இங்கிலாந்தின் புகாயோ சகா ஒரு கோல் அடித்தார். 

இறுதியில், இங்கிலாந்து அணி 3-0 என்ற கோல் கணக்கில் செனகல் அணியை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியறது. 

செனகல் அணி வீரர்களால் ஒரு கோல் கூட முடியவில்லை.

தொடர்புடைய செய்திகள்

+ - reset